top of page

சாமை சாக்லேட் புட்டிங்

Prep Time:

15Minutes

Cook Time:

25Minutes

Serves:

5Servings

Level:

Beginner

About the Recipe

சாமையில் உடலுக்கு நன்மை தரும் கொழுப்புகள் அடங்கியுள்ளதால் இதயம் சம்பந்தமான நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்து, மாரடைப்பு வராமல் தடுக்கும்

Ingredients

  • 1 கப் சாமை அரிசி

  • 2 கப் பால்

  • 1 கப் பொடித்த சர்க்கரை

  • 1 டேபிள் ஸ்பூன் கோகோ பவுடர்

  • 1/4 கப் டூட்டி பிருட்டி

  • சிறிதளவு பொடித்த பாதாம்

  • 1 1/2 டேபிள் ஸ்பூன் நெய்

  • சிறிதளவு உப்பு

  • 5-6 பாதாம் தண்ணீரில் ஊற வைத்துகொள்ளவும் அலங்கரிக்க

Preparation

  • அரிசியை நன்கு கழுவி தண்ணீர் ஊத்தி 30 நிமிடம் ஊற வைத்து கொள்ளவும்.

  • ஒரு பாத்திரத்தில் பால் சேர்த்து கொதிக்க விடவும்.

  • பால் கொதித்ததும் அதில் அரிசி,உப்பு சேர்த்து மூடி போட்டு வேக வைத்து கொள்ளவும்.

  • வெந்ததும் அதில் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும்.

  • அத்துடன் கோகோ பவுடர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

  • அத்துடன் நெய் சேர்த்து கலந்து கூடவே டூட்டி பிருட்டி சேர்த்து கொள்ளவும்

  • இறுதியாக பொடித்த பாதாம் சேர்த்து கலந்து அடுப்பை அனைத்து இறக்கி கொள்ளவும்

  • சூடாக அல்லது பிரிட்ஜில் வைத்து பரிமாறவும். அருமையான புட்டிங் மேலே ஊற வைத்த பாதாம் துருவி அலங்கரிக்கவும்.

bottom of page