top of page

சாமை கேசரி

Prep Time:

10Minutes

Cook Time:

25Minutes

Serves:

5Servings

Level:

Beginner

About the Recipe

குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் சளி, ஆஸ்துமா போன்ற நுரையீரல் தொந்தரவுகளை சாமை உணவுகள் சரி செய்யும். இதில் உள்ள ஃபோலிக் அமிலம், மூளை வளர்ச்சிக் குன்றிய குழந்தைகள் உருவாகாமல் தடுக்கும். இதில் உள்ள புரதச்சத்து மற்ற தானியங்களைவிட அதிகம் என்பதால் குழந்தைகளுக்கும், விளையாட்டு வீரர்களுக்கும் நல்ல உடல் வலிமையை தரும்.

Ingredients

  • ஒரு கப் சாமை அரிசி

  • ஒன்றரை கப் சர்க்கரை

  • நெய் கால் கப்

  • ஏலக்காய் தூள் அரை டீஸ்பூன்

  • 5 முந்திரி

  • 5 திராட்சை

  • கேசரி பவுடர் ஒரு சிட்டிகை

Preparation

  • ஒரு வாணலியில் சிறிது நெய் விட்டு நறுக்கிய முந்திரி திராட்சையை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

  • பிறகு அதே வாணலியில் 3 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.தண்ணீர் கொதித்த பின் சாமையை அதனுடன் சேர்த்து நன்கு வேகவிடவும். ஒரு சிட்டிகை கேசரி பவுடர் சேர்க்கவும்.

  • சாமை வெந்த பிறகு ஏலக்காய் தூள் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி விடவும். சர்க்கரை கரைந்த சூடான நெய் கால் கப் விட்டு நன்கு கிளறவும்

  • சாமை கேசரி இறக்கிய பின் வறுத்த முந்திரியை மேலே தூவி அலங்கரிக்கவும். சுவையான சாமை கேசரி தயார்

bottom of page