top of page

சாமை கிச்சடி

Prep Time:

15Minutes

Cook Time:

25Minutes

Serves:

4Servings

Level:

Beginner

About the Recipe

சாமை அரிசி, உணவில் அடிக்கடி பயன்படுத்தி வந்தால் முடி உதிர்தல் குறையும்.

Ingredients

  • சாமை ஒரு ஆழாக்கு

  • வெங்காயம் – 2

  • தக்காளி – 2

  • உருளைக்கிழங்கு – 2

  • கேரட் – 1 அல்லது 2

  • பீன்ஸ் சுமார் 5 முதல் 10 வரை

  • குடைமிளகாய் – 1

  • பச்சை பட்டாணி – 1 கைப்பிடி (என்னிடம் அன்று இல்லாததால் சேர்க்கவில்லை)

  • பச்சை மிளகாய் – 2 அல்லது 3

  • மஞ்சள் தூள் சிறிதளவு

  • உப்பு தேவையான அளவு

  • கொத்துமல்லி சிறிதளவு

  • தண்ணீர் – 2 ஆழாக்கு

  • எலுமிச்சை சாறு சிறிதளவு (தேவைப்பட்டால்)

தாளிக்க:

  • நெய் தேவையான அளவு

  • கடுகு – 1 தேக்கரண்டி

  • உளுத்தம்பருப்பு – 1 தேக்கரண்டி

  • ஏலக்காய் – 1 அல்லது 2

  • இஞ்சி ஒரு அங்குலத் துண்டு

  • கறிவேப்பிலை சிறிதளவு

Preparation

  • சாமையைத் தண்ணீரில் நன்றாக அலசவும். 

  • வெறும் வாணலியில் சுத்தம் செய்த சாமையை வாசம் வரும்வரை வறுக்கவும்.

  • வறுத்த சாமையை வேறு ஒரு பாத்திரத்தில் மாற்றி தண்ணீர் சேர்த்து 15 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.

  • வாணலியில் நெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்து தாளிக்கவும். 

  • நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.

  • வெங்காயம் வதங்கியதும் தக்காளித் துண்டுகளைச் சேர்த்து வதக்கவும்.

  • குடைமிளகாய்த் தவிர பிற காய்களை முதலில் சேர்த்து, மஞ்சள் தூளும் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.

  • காய்கள் பாதி வதங்கியதும் குடைமிளகாய் சேர்த்து தண்ணீர் ஊற்றி உப்பு சேர்க்கவும்.

  • தண்ணீர் கொதிக்கத் தொடங்கியதும் ஊற வைத்த சாமையை நன்றாகப் பிழந்து கொதிக்கும் நீரில் சேர்க்கவும். 

  • தண்ணீர் வற்றியதும் தட்டுப் போட்டு மூடி, தீயைக் குறைத்து மேலும் சிறிது நேரம் சமைக்கவும். 

  • சாமை வெந்ததும் கொத்துமல்லித் தழையைத் தூவி அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.

  • தேவைப்பட்டால் சிறிது எலுமிச்சை சாறு சேர்க்கலாம்.

குறிப்பு:

  • சாமை கிச்சடி உதிரியாக வேண்டுமென்றால் 1:2 என்ற கணக்கில் தண்ணீர் போதும். குழைவாக வேண்டுமென்றால் 1:3 என்ற கணக்கிலோ அதற்குச் சற்று அதிகமாகவோ சேர்க்கலாம்.

  • உலர்ந்த பச்சைப் பட்டாணியாக இருந்தால், வேக வைத்தப் பின் சேர்க்கவும். 

bottom of page