top of page

சாமை உருண்டை

Prep Time:

7Minutes

Cook Time:

25Minutes

Serves:

3Servings

Level:

Intermediate

About the Recipe

மலக்கழிவுகள் உடலிருந்து சரியாக வெளியேறாவிட்டால் பல்வேறு நோய்கள் ஒன்றன் பின் ஒன்றாக வரும். சாமையை உணவோடு சேர்த்து கொண்டால் நோய்களுக்கெல்லாம் மூலமாக கருதப்படும் மலச்சிக்கலிருந்து விடுபட முடியும். இதுமட்டுமல்லாமல் வயிற்றுக் கோளாறுகளையும் சரி செய்யும்.

Ingredients

  • 1 கப் சாமை

  • 2 டீஸ்பூன் பொட்டுக்கடலை

  • 2 டீஸ்பூன் தேங்காய் துருவல்

  • 2 டீஸ்பூன் நெய்

  • 1 கப் வெல்லம்

Preparation

  • முதலில் வெல்லப்பாகு தயார் பண்ணலாம். அதுக்கு அடுப்பில் கடாயை வைத்து வெல்லம் சேர்த்து அரை கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்கவைத்து வெல்லம் கரைந்த பின் வடிகட்டி எடுத்துக்கலாம்.

  • ஒரு கப் சாமை அரிசி கழுவி 30 நிமிடங்கள் ஊற வைக்கணும். மறுபடியும் கழுவி அதை ஒரு காட்டன் துணியில் போட்டு காய வைக்கலாம்.

  • நன்கு காய்ந்தபின் கடாயில் சாமை, பொட்டுக்கடலை போட்டு நன்கு வறுத்து எடுக்கவும். ஆறியபின் மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக்கலாம்.

  • கடாயில் நெய் ஊத்தி‌ சாமை பொட்டுக்கடலை பொடியை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இது கூட தேங்காய் துருவல் போட்டு நன்கு வறுக்கவும். அடுப்பை அனைத்து விட்டு வெல்லப்பாகு ஊத்தி உருண்டை பிடிக்கவும்.

bottom of page