top of page

சாமை இனிப்பு களி

Prep Time:

15Minutes

Cook Time:

20Minutes

Serves:

3Servings

Level:

Advanced

About the Recipe

இதில் உள்ள அதிகப்படியான கால்சியம் காரணமாக எலும்புகள் வலு பெறுகின்றன. மேலும் உடலின் தசைகளையும் வலிமை பெறச் செய்கிறது.

Ingredients

  • சாமை அரிசி - 1 கப்

  • பொடித்த வெல்லம் - 300 கிராம்

  • நெய் - 3 டேபிள் ஸ்பூன்

  • ஏலக்காய் – 3

  • முந்திரி - 5 – 7

  • தேங்காய்த் துருவல் - 3 டேபிள் ஸ்பூன்

  •  உலர்ந்த திராட்சை - 1 டேபிள் ஸ்பூன்

  •  பால் - 100 மி.லி.

  •  தண்ணீர் - 3 கப்

  • உப்பு - 1 டீஸ்பூன்

Preparation

  • சாமை அரிசியை நான்கு மணி நேரம் ஊற வையுங்கள்.

  • நன்றாக ஊறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்துக்கொள்ளுங்கள்.

  • ஒரு அகலமான பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்கவைத்து அரைத்த மாவை ஊற்றிக் கட்டியில்லாமல் கிளறுங்கள். அதில் உப்பும் பாலும் சேர்த்து அடிபிடிக்காமல் மிதமான சூட்டில் கிளறிவிடுங்கள்.

  • பொடித்த வெல்லத்தைச் சேர்த்துக் கிளறி, மாவு திரண்டு கெட்டியாக வரும்போது அடுப்பை அணைத்துவிடுங்கள்.

  • வாணலியில் நெய்யை ஊற்றிச் சூடானதும் தேங்காய்த் துருவல், நறுக்கிய முந்திரி, உலர்ந்த திராட்சை, ஏலக்காய்த்தூள் ஆகியவற்றைச் சேர்த்துத் தாளித்து அதை மாவுடன் சேர்த்துக் கிளறிப் பரிமாறுங்கள்.

bottom of page