top of page

சாமை அல்வா

Prep Time:

10Minutes

Cook Time:

45Minutes

Serves:

4Servings

Level:

Advanced

About the Recipe

சாமை அரிசி எடை குறைக்க விரும்புபவர்களுக்கு ஒரு சிறந்த தேர்வாகும். இது இரும்பு, கால்சியம், துத்தநாகம், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி சத்துக்கள் நிரம்பியுள்ளன. மேலும் இதில் அதிக நார்ச்சத்து இருப்பதால் எடை இழப்புக்கு உதவுகிறது.

Ingredients

  • 1 கப் சாமை

  • 1/2 கப் டெசிகேடட் தேங்காய் பவுடர்

  • 8 ஏலக்காய்

  • 4 கப் (1 லிட்டர்) பால்

  • 100 கிராம் நெய்

  • 25 முந்திரி

  • 2 டேபிள்ஸ்பூன் பாதாம் நறுக்கியது

  • 10 திராட்சை

  • 1 1/2 கப் அச்சு வெல்லம்

  • 1 சிட்டிகை உப்பு

Preparation

  • சாமை அரிசியை அலசி பின் தண்ணீர் ஊற்றி 1 மணி நேரம் வரை ஊறவிடவும், பின் வடிகட்டி துணியில் உலர்த்தி விடவும்.


  • பின் வாணலியில் 25 மில்லி நெய் விட்டு சூடானதும் சாமை அரிசியை சேர்த்து நன்கு வறுக்கவும். பின் ஆறவிட்டு மிக்ஸியில் போட்டு பொடிக்கவும் மணல் மணலாக இருக்க வேண்டும்.


  • பின் 2 டேபிள்ஸ்பூன் நெய் விட்டு சூடானதும் முந்திரி திராட்சை வறுத்து தனியே எடுத்து வைக்கவும், அதில் 10 முந்திரி ஐ தனியே எடுத்து வைத்துட்டு மீதியை கரகரப்பாக பொடித்து கொள்ளவும் பாதாமை வறுத்து எடுத்து தனியே வைக்கவும்.


  • பின் மீண்டும் 2 டேபிள்ஸ்பூன் நெய் விட்டு சூடானதும் அரைத்த சாமையை சேர்த்து நன்கு வதக்கவும் பின் காய்ச்சிய பால் சேர்த்து நன்கு கட்டியில்லாமல் கிளறி விடவும் பின் மூடி வைக்கவும் அவ்வப்போது திறந்து கிளறி விடவும்.


  • சாமை நன்கு வெந்து பால் முழுவதும் சுண்டியதும் தேங்காய் பவுடர் சேர்த்து நன்கு கிளறவும் பின் பொடித்த வெல்லம் சேர்த்து நன்கு கிளறவும்.


  • பின் வெல்லம் கரைந்து இளகி பின் சேர்ந்து வரும் போது ஏலக்காய்த்தூள் உப்பு சேர்த்து நன்கு கிளறவும். பின் கரகரப்பாக பொடித்த முந்திரி சேர்த்து நன்கு கிளறவும்.


  • பின் 50 மில்லி நெய் சூடா ஊற்றி நன்கு கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும் வரை கிளறவும் பின் அடுப்பை அணைத்து விடவும்.


  • பின் இதை இன்னும் கொஞ்சம் ருசியை அதிகரிக்க தம் போடவும் இதை ஒரு பாத்திரத்தில் மாற்றி மேலே மீதமுள்ள நெய்யை ஊற்றி வறுத்த முந்திரி திராட்சை பாதாம் பரவலாக தூவி அலுமினிய பாயிலை கொண்டு மூடி சூடாக்கிய ஓவனில் 8 நிமிடம் வரை வைத்து எடுக்கவும் (அதிகம் வைக்க வேண்டாம்)மேல் பகுதி நன்கு சிவந்து ருசி நன்றாக இருக்கும்.

bottom of page