top of page

சாமை அரிசி சாக்லேட் புட்டிங்

Prep Time:

15 Minutes

Cook Time:

45 Minutes

Serves:

4 servings

Level:

Beginner

About the Recipe

சாமையில் இயற்கையாகவே சுண்ணாம்பு சத்து உள்ளது.
புரதமும் நிறைந்துள்ளது. இது எலும்பு முறிவு மற்றும் எலும்பு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வாகிறது. தளர்ச்சியை போக்கி எலும்புகளுக்கு ஊட்டம் அளிக்க செய்கிறது.
உடலுக்கு வலிமை தரும்.
விந்தணு உற்பத்தி அதிகரிக்கும்.
இரத்த சோகை ஏற்படாமல் தடுக்கும்.
சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்கும்.

Ingredients

  • 1 கப் சாமை அரிசி

  • 2 கப் பால்

  • 1 கப் பொடித்த சர்க்கரை

  • 1 டேபிள் ஸ்பூன் கோகோ பவுடர்

  • 1/4 கப் டூட்டி பிருட்டி

  • சிறிதளவு பொடித்த பாதாம்

  • 1 1/2 டேபிள் ஸ்பூன் நெய்

  • சிறிதளவு உப்பு

  • 5-6 பாதாம் தண்ணீரில் ஊற வைத்து கொள்ளவும். (அலங்கரிக்க).

Preparation

  • அரிசியை நன்கு கழுவி தண்ணீரில் 30 நிமிடம் ஊற வைத்து கொள்ளவும்.

  • ஒரு பாத்திரத்தில் பால் சேர்த்து கூடவே சிறிதளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

  • பால் கொதித்ததும் அதில் அரிசி சேர்த்து மூடி போட்டு வேக வைத்து கொள்ளவும்.

  • வெந்ததும் அதில் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும். அத்துடன் கோகோ பவுடர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

  • அத்துடன் நெய் சேர்த்து கலந்து கூடவே டூட்டி பிருட்டி சேர்த்து கொள்ளவும்.

  • இறுதியாக பொடித்த பாதாம் சேர்த்து கலந்து அடுப்பை அணைத்து இறக்கி கொள்ளவும்.

  • சூடாக அல்லது பிரிட்ஜில் வைத்து பரிமாறவும். அருமையான புட்டிங் மேலே ஊற வைத்த பாதாம் துருவி அலங்கரிக்கவும்.

bottom of page