top of page

சாமை அரிசி கேசரி

Prep Time:

15 Minutes

Cook Time:

15 Minutes

Serves:

7 servings

Level:

Beginner

About the Recipe

சாமை எலும்பை வலுப்படுத்தும்.
புரதமும் நிறைந்துள்ளது. இது எலும்பு முறிவு மற்றும் எலும்பு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வாகிறது. தளர்ச்சியை போக்கி எலும்புகளுக்கு ஊட்டம் அளிக்க செய்கிறது.
உடலுக்கு வலிமை தரும்.
விந்தணு உற்பத்தி அதிகரிக்கும்.
இரத்த சோகை ஏற்படாமல் தடுக்கும்.
சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்கும்.

Ingredients

  • 3/4 கப் சாமை அரிசி

  • 1/2 கப் நாட்டு சக்கரை

  • 2 டேபிள் ஸ்பூன் நெய்

  • சிறிதளவு முந்திரிப் பருப்பு, உலர்ந்த திராட்சை

  • சிறிதளவு டூட்டி ப்ரூட்டி

  • 1 டீ ஸ்பூன் ஏலக்காய்த்தூள்

  • 1 பின்ச் உப்பு

Preparation

  • ஒரு கடாயில் நெய் ஊற்றி முந்திரிப்பருப்பு, திராட்சை சேர்த்து வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும், அதே கடாயில் சாமை அரிசியை லேசாக கலர் மாறும் வரை வறுத்து கொள்ளவும்,.

  • வறுத்து வைத்த சாமை மிக்ஸி ஜாரில் சேர்த்து ரவை பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.

  • ஒரு கடாயில் 4 கப் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும், தண்ணீர் கொதித்ததும் அரைத்து வைத்த சாமை அரிசியை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கட்டிபடாமல் கிளறவும். மூடி போட்டு வேக விடவும்.

  • அரிசி வெந்து வந்தவுடன் நாட்டு சக்கரை சிறிதளவு நெய் சேர்த்து கிளறி விடவும்.

  • கடைசியாக வறுத்து வைத்த முந்திரிப் பருப்பு காய்ந்த திராட்சை, டூட்டி ஃப்ரூட்டி, ஏலக்காய்தூள், ஒரு பின்ச் உப்பு சேர்த்து சிறிதளவு நெய் சேர்த்து கிளறி விடவும்.

bottom of page