top of page

சவுல் சம்பா இட்லி

Prep Time:

30 Minutes

Cook Time:

15 Minutes

Serves:

8 Servings

Level:

Beginner

About the Recipe

இயற்கையாகவே விளைவதால், புரதச்சத்துகள், தாது உப்புகள் நிறைந்தது.
அதிக உடல்உழைப்பு உள்ளவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துகளைத் தரக்கூடியது.

Ingredients

  • சவுல் சம்பா அரிசி 3 கப்

  • இட்லி அரிசி 1 கப்

  • உளுந்து 1 கப்

  • வெந்தயம் 1/2 ஸ்பூன்

  • உப்பு தேவையான அளவு

Preparation

  • சவுல் சம்பா அரிசி, இட்லிஅரிசி தனியாகவும், உளுந்து மற்றும் வெந்தயம் தனியாகவும் கழுவி 8 மணி நேரம் ஊற வைக்கவும்.

  • உளுந்து மற்றும் வெந்தயம் சேர்த்து 20-25 நிமிடங்கள் அரைத்து கொள்ளவும்.

  • சவுல்சம்பா அரிசி மற்றும் இட்லி அரிசியையும் சேர்த்து 20-25 நிமிடங்கள் அரைத்து கொள்ளவும்.

  • இப்போது அரிசி மற்றும் உளுந்து மாவையும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து 8 மணி நேரம் புளிக்க வைத்து கொள்ளவும்.

  • புளித்த பிறகு லேசாக கலக்கி இட்லி தட்டில் மாவை ஊற்றி 10-15 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும். சட்னி அல்லது சாம்பார் உடன் சுவைக்கலாம்.

bottom of page