top of page

சன்னா பன்னீர் மசாலா

Prep Time:

15Minutes

Cook Time:

30Minutes

Serves:

6Servings

Level:

Intermediate

About the Recipe

கொண்டைக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு ஏற்படாது. கொண்டைக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வரும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு குறைவு. மேலும் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் மனநிலை மாற்றத்தை சரிசெய்யவும் கொண்டைக்கடலை உதவும்.

Ingredients

  • கொண்டைக்கடலை - 1 கப்


  • பன்னீர் - 250 கிராம் (துருவியது அல்லது நறுக்கியது)


  • வெங்காயம் - 2 (நறுக்கியது)


  • இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்


  • தக்காளி - 2 (நறுக்கியது)


  • மல்லி தூள் - 1 டீஸ்பூன்


  • மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்


  • சீரகப் பொடி - 1 டீஸ்பூன்


  • மிளகு தூள் - 1 டீஸ்பூன்


  • கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்


  • மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்


  • மாங்காய் தூள் - 1 டீஸ்பூன்


  • சீரகம் - 1 டீஸ்பூன்


  • உப்பு - தேவையான அளவு


  • எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்


  • தண்ணீர் - 1 கப்


  • கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)

Preparation

  • கொண்டைகடலையை நீரில் போட்டு 5 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

  • 5 மணிநேரம் ஆனப் பின்பு அதனை கழுவி குக்கரில் போட்டு 1 கப் தண்ணீர் மற்றும் சிறிது உப்பு சேர்த்து தீயை குறைவில் வைத்து 2 விசில் விட்டு இறக்கி அதனை குளிர வைக்க வேண்டும்.

  • பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் போட்டு தாளித்து, வெங்காயம் சேர்த்து 5-6 நிமிடம் தீயை குறைவில் வைத்து வதக்க வேண்டும்.

  • பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2-3 நிமிடம் வதக்கி, தக்காளி, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகப் பொடி, மல்லி தூள், மாங்காய் தூள், மிளகு தூள் சேர்த்து 5-6 நிமிடம் கிளறி, கொண்டைகடலை,பன்னீரைப் போட்டு, கரம் மசாலா சேர்த்து தீயை குறைவில் வைத்து 5 நிமிடம் வதக்கி இறக்க வேண்டும். இப்போது சுவையான பன்னீர் சன்னா மசாலா ரெடி.

bottom of page