top of page

கொத்தமல்லி துவையல்

Prep Time:

15Minutes

Cook Time:

1Minutes

Serves:

4Servings

Level:

Beginner

About the Recipe

நரம்பு மண்டலத்தை பலப்படுத்தி அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

Ingredients

  • கொத்தமல்லி தழை – ஒரு கைப்பிடி அளவிற்கு

  • தேங்காய் – 100 கிராம்

  • இஞ்சி – ஒரு துண்டு

  • பூண்டு பல் – 5

  • புளி – நெல்லிக்காய் அளவிற்கு

  • பச்சை மிளகாய் – 10

  • உப்பு – ஒரு டேபிள்ஸ்பூன்

  • தண்ணீர் – 100ml

தாளிக்க   

  • சமையல் எண்ணெய் – 2 டீஸ்பூன்

  • கடுகு – கால் டீஸ்பூன்

  • உளுத்தம் பருப்பு – அரை டீஸ்பூன்

  • வர மிளகாய் – 1

Preparation

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். கொத்தமல்லியை தண்டு பகுதியை நீக்கி இலை இருக்கும் தண்டுடன் கூடிய பகுதியை மட்டும் தண்ணீரில் நன்கு அலசி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

  • ஒரு மிக்ஸி ஜாரில் அவற்றை போட்டு அதனுடன் துண்டு துண்டாக வெட்டிய தேங்காய் 100 கிராம் அளவிற்கு சேர்த்துக் கொள்ளுங்கள்.

  • பின்னர் ஒரு துண்டு இஞ்சி, 5 பல் பூண்டு, சிறு நெல்லிக்காய் அளவிற்கு புளி, 10 பச்சை மிளகாய்கள் ஆகியவற்றையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து கொள்ளுங்கள்.

  • பின்னர் துவையலுக்கு தேவையான அளவிற்கு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி மிக்ஸியில் ஜாரை மூடி நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

  • இதற்கு தாளிக்க ஒரு கரண்டியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுந்து மற்றும் வர மிளகாய் கிள்ளிப் போட்டு தாளித்து துவையலுடன் சேர்க்கவும்.

  • இந்த சுவைக்கு ஈடு இணை எதுவும் இல்லை. இட்லி, தோசை, சாதம், சப்பாத்தி என்று அனைத்து வகை உணவுகளுக்கும் தொட்டுக் கொள்ள அட்டகாசமான காம்பினேஷனாக இருக்கும்.

bottom of page