top of page

கொண்டைக்கடலை வடை

Prep Time:

20Minutes

Cook Time:

10Minutes

Serves:

7Servings

Level:

Beginner

About the Recipe

கொண்டைக்கடலையை வறுத்து பொடி செய்து தினமும் இருமுறை உட்கொண்டு வந்தால் சிறுநீர் சரிவர வெளிப்படாமல் சொட்டு சொட்டாக போதல், சிறுநீர் எரிச்சல் போன்றவை குணமாகும்.

Ingredients

  • 2 கப் சென்னா

  • 2 வரமிளகாய்

  • சிறிதளவு பெருங்காயம்

  • தேவைக்கு உப்பு

  • 1 பெரிய வெங்காயம்

  • 2 பச்சைமிளகாய்

  • 1 கொத்து கருவேப்பிலை

  • சிறிதளவு கொத்தமல்லிதழை

  • தேவைக்கு சமையல் எண்ணெய்

Preparation

  • முதலில் சென்னாவை 6 மணிநேரம் ஊறவைக்கவும்.பின் தண்ணீரை வடிகட்டி வர மிளகாய், உப்பு சேர்த்து அரைக்கவும்.

  • அரைக்கும் போதே பெருங்காயம் சிறிதளவு சேர்க்கவும்.வடை பதத்துக்கு அரைத்துக் கொள்ளவும்.

  • பின் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய்,கருவேப்பிலை, மல்லிதழை சேர்த்து பிசைந்து கொள்ளவும்.பின் வாணலியை அடுப்பில் வைத்து தேவையான எண்ணெய் விட்டு வடைகளாக சுட்டு எடுக்கவும். சென்னாவடை ரெடி.

bottom of page