top of page

கொண்டைக்கடலை பிரியாணி

Prep Time:

15Minutes

Cook Time:

20Minutes

Serves:

5Servings

Level:

Intermediate

About the Recipe

கொண்டைக்கடலையை தண்ணீரில் ஊற வைத்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை குறைபாடு நீங்கி ஆண்மை அதிகரிக்கும்.

Ingredients

  • 250 கிராம் அரிசி

  • 2 கப் கொண்டகடலை இரவில் ஊற வைக்கவும்

  • 2 தக்காளி

  • 2 பச்சை மிளகாய்

  • ஒரு ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது

  • 3 ஸ்பூன் தயிர்

  • ஒரு ஸ்பூன் மிளகாய்தூள்

  • ஒரு ஸ்பூன் மல்லித்தூள்

  • ஒரு ஸ்பூன் கரம்மசாலா

  • கால் டீஸ்பூன் மஞ்சள்தூள்

  • தேவையான அளவு உப்பு

  • 1 பெரிய வெங்காயம்

  • ஒரு இன்ச் பிரியாணி இலை,பட்டை

  • 2 கிராம்பு

  • 2 ஏலக்காய்

  • 1 லவங்கம்

  • 7 மிளகு

Preparation

  • குக்கரில் எண்ணெய் விட்டு பிரியாணி இலை,பட்டை,கிராம்பு, ஏலக்காய், லவங்கம்,மிளகு இவை அனைத்தும் வறுக்கவும். அதனுடன் பச்சைமிளகாய் சேர்க்கவும், நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும் பொன்னிறமாக வந்தபின் இஞ்சி பூண்டு விழுதை சேர்க்கவும்,தக்காளி சேர்த்து வதக்கவும் தக்காளி வதங்கிய பின் புதினா கொத்தமல்லி இலை சேர்க்கவும். தயிருடன், மிளகாய்த்தூள்,மல்லித்தூள்,கரம் மசாலா,மஞ்சள் தூள் கலக்கி வதங்கிய தக்காளி உடன் சேர்க்கவும்.


  • பின் கொண்டகடலை சேர்க்கவும். 5 நிமிடம் வேக வைக்கவும். பின்பு அரிசியை சேர்த்து அரிசிக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும். கொண்டைக்கடலை பிரியாணி ரெடி.

bottom of page