top of page

கொண்டைக்கடலை பருப்பு அரிசி சாதம்

Prep Time:

15Minutes

Cook Time:

20Minutes

Serves:

6Servings

Level:

Beginner

About the Recipe

உடலில் கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. இதனால் இருதய நோய்கள் ஏற்படும் அபாயம் குறைவு. கொண்டைக்கடலையை அதிகம் சாப்பிடுவதால் இருதய ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

Ingredients

  • 1 கப் புழுங்கல் அரிசி

  • 1/4 கப் பச்சை கடலை பருப்பு

  • 1/4 கப் சாம்பார் வெங்காயம்

  • 5 பல் பூண்டு

  • 1டீஸ்பூன் சாம்பார் மிளகாய் தூள்

  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்

  • 1 டீஸ்பூன் உப்பு

  • 1 டீஸ்பூன் எண்ணெய்

  • கறிவேப்பிலை

தாளிக்க

  • 4 ஸ்பூன் எண்ணெய்

  • 1/4 டீஸ்பூன் கடுகு

  • 1/4 டீஸ்பூன் உளுந்து பருப்பு

  • 1/2 டீஸ்பூன் கடலை பருப்பு

  • சாம்பார் வெங்காயம்

  • பூண்டு

  • கறிவேப்பிலை

Preparation

  • ஒரு பாத்திரத்தில் அரிசி பருப்பு இரண்டையும் சேர்த்து இரண்டு மூன்று முறை கழுவிஅரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும் .

  • சாம்பார் வெங்காயம், பூண்டு தோல் உரித்து தயாராக வைக்கவும்.

  • பின்பு குக்கரில் அரிசி, பருப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, முழு சாம்பார் வெங்காயம், பூண்டு, ஒரு ஸ்பூன் எண்ணெய் ,3 டம்ளர் தண்ணீர் சேர்த்து கலந்து மூன்று விசில் வைத்து எடுக்கவும்.

  • ஐந்து நிமிடங்கள் விட்டு எடுத்து ஐந்து நிமிடங்கள் ஆற விடவும்.

  • ஒரு வாணலியை ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து, கடலை பருப்பு சேர்த்து பொரிந்ததும் நறுக்கி வைத்துள்ள சாம்பார் வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

  • பின்னர் குக்கரில் உள்ள சாதத்தை சேர்த்து இரண்டு நிமிடங்கள் கலந்து எடுத்தால் சுவையான அரிசி பருப்பு சாதம் தயார்.

  • பின்னர் தயாரான சாதத்தை எடுத்து ஒரு பரிமாறும் பௌலில் சேர்க்கவும்.

  • இப்போது மிகவும் சுவையான சங்கராந்தி அன்று செய்யும் பருப்பு அரிசி சாதம் சுவைக்கத் தயார்.

bottom of page