top of page

கொண்டைக்கடலை கிரேவி

Prep Time:

15Minutes

Cook Time:

35Minutes

Serves:

9Servings

Level:

Intermediate

About the Recipe

கொண்டைக்கடலையில் புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் உடல் எடை குறைக்க நினைத்தால் இதனை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளலாம். உங்களுக்கு அவ்வப்போது ஏற்படும் பசியை போக்கி நீண்ட நேரம் பசி ஏற்படாமல் தடுக்கும்.

Ingredients

  • கொண்டைக்கடலை – ஒரு கப்

  • பெரிய வெங்காயம் – 1

  • பூண்டு – 3

  • இஞ்சி – 2 துண்டு

  • மஞ்சள் தூள் – 1/2 tsp

  • மிளகாய்த்தூள் – 1 tsp

  • தனியாத்தூள் – 2 tsp

  • கரம் மசாலா – 1/2 tsp

  • சீரகத்தூள் – 1 tsp

  • தக்காளி – 2

  • தாளிக்க பட்டை – 2 துண்டு

  • தாளிக்க கிராம்பு – 3

  • தாளிக்க பிரிஞ்சி இலை – 1

  • தாளிக்க ஏலக்காய் – 3

  • உப்பு தேவையான அளவு

  • தண்ணீர் தேவையான அளவு

  • எண்ணெய் தேவையான அளவு

  • கொத்தமல்லி இலைகள் சிறிதளவு

Preparation

  • ஒரு கப் கொண்டக்கடலையை 8 மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் அதனை 2 விசில் வரும் வரை குக்கரில் தேவையான அளவு தண்ணீர் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து வேக வைக்கவும்.

  • ஒரு கடாயில் 2 tsp எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய வெங்காயம், பூண்டு, இஞ்சி சேர்த்து நன்கு வதக்கவும். இத்துடன் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித் தூள், கரம் மசாலா, சீரகத்தூள் சேர்க்கவும். மசாலா நன்கு வதங்கிய பின்னர் நறுக்கிய தக்காளியை சேர்த்து 7-8 நிமிடம் வேக வைக்கவும். தக்காளி வெங்காய கலவை நன்கு ஆறிய பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைக்கவும்.

  • ஒரு கடாயில் 2 tsp எண்ணெய் ஊற்றி அதில் பிரிஞ்சி இலை, ஏலக்காய்,கிராம்பு, பட்டை, சோம்பு சிறிதளவு சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். பின்னர் அரைத்த கலவையை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும். 3 நிமிடம் பின்பு வேக வைத்த ஒரு கப் கொண்டைக் கடலை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும்.

  • கிரேவி கெட்டியாக வருவதற்கு சிறிது கொண்டை கடலையை மசிக்கவும். கடைசியாக அதனுடன் நறுக்கிய கொத்தமல்லியை சேர்க்கவும்.

bottom of page