top of page

கொண்டைக்கடலை எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு

Prep Time:

20Minutes

Cook Time:

40Minutes

Serves:

11Servings

Level:

Intermediate

About the Recipe

எலும்புகளின் உறுதிக்கு வைட்டமின், தாதுக்கள், கால்சியம், மக்னீஷியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் கே போன்றவை தேவை. இவை அனைத்தும் கொண்டைக்கடலையில் அபரிமிதமாக உள்ளது. எலும்புகளின் வளர்ச்சிக்கும் உறுதிக்கும் கொண்டைகடலையை அதிகம் சேர்த்து கொள்ளலாம்.

Ingredients

  • 1/2 கப் கருப்பு கொண்டைக்கடலை

  • 5 கத்தரிக்காய்

  • 1/2 கப் சாம்பார் வெங்காயம்

  • 4 வற்றல் மிளகாய்


  • 1 டேபிள் ஸ்பூன் தனியா

  • 1 டீஸ்பூன் சீரகம்

  • 1/4 டீஸ்பூன் மிளகு,வெந்தயம்

  • 1/4 கப் தேங்காய் துருவல் அல்லது துண்டுகள்

  • சிறிய நெல்லிக்காய் அளவு புளி

  • கறிவேப்பிலை

  • தேவையான அளவு உப்பு

தாளிக்க

  • 1 டீஸ்பூன் எண்ணெய்

  • 1/4 டீஸ்பூன் கடுகு

  • நறுக்கிய வெங்காயம்

  • கறிவேப்பிலை

Preparation

  • கடலையை நன்கு கழுவி இரவு முழுதும் ஊறவைத்து குக்கரில் 2 விசில் விட்டு எடுக்கவும்.

  • வெங்காயத்தை நறுக்கி, மற்ற பொருட்களை எடுத்து வைத்துக்கொள்ளவும்.

  • வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தனியா,சீரகம்,வெந்தயம்,மிளகு, கறிவேப்பிலை, வற்றல், நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.

  • பின்னர் மிக்சியில் தேங்காய் துருவல் சேர்த்து,மஞ்சள் தூள், கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி விழுதாக அரைக்கவும்.

  • வேறு ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்துள்ள கத்தரிக்காயை சேர்த்து வதக்கவும்.

  • பின்னர் ஒரு மண் பாத்திரத்தை வைத்து வெந்த கடலையை சேர்த்து ஐந்து நிமிடங்கள் வெந்தவுடன் அரைத்து வைத்துள்ள மசாலா விழுதை சேர்க்கவும்.

  • ஐந்து நிமிடங்கள் வேகவிடவும். பின்பு வதக்கி வைத்துள்ள கத்தரிக்காயை சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து இரண்டு நிமிடங்கள் வெந்தவுடன் எண்ணெயில் கடுகு,கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம் சேர்த்து தாளித்து கொதிக்கும் குழம்பில் சேர்த்து இறக்கவும்.

  • பின்னர் எடுத்து பரிமாறும் பௌலில் சேர்க்கவும்

  • இப்போது மிகவும் சுவையான கொண்டைக்கடலை எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு சுவைக்கத் தயார்.

  • இந்த குழம்பு பாரம்பரியமாக செய்யக்கூடியது. சாதத்துடன் பிசைந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.இட்லி, தோசையுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

bottom of page