top of page

கொண்டைகடலை பீச் சுண்டல்

Prep Time:

15Minutes

Cook Time:

25Minutes

Serves:

7Servings

Level:

Beginner

About the Recipe

கொண்டைகடலையில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. மேலும் இதில் கரையும் நார்ச்சத்துக்கள், புரோட்டீன், இரும்புச்சத்து போன்றவை இருக்கிறது. அதனால் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடன் வைக்க இவை உதவி செய்கிறது.

Ingredients

  • 2 கப் வெள்ளை சென்னா

  • பாதி மாங்காய்

  • 1/2 மூடிதேங்காய்

  • 1 டீ ஸ்பூன் கடுகு

  • 1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு

  • 1 ஸ்பூன் கடலை பருப்பு

  • 1 துண்டு இஞ்சி

  • 4 பச்சை மிளகாய்

  • ருசிக்கு உப்பு

  • 1 டீ ஸ்பூன் மஞ்சள் தூள்

  • கறிவேப்பிலை

  • 1 டேபிள் ஸ்பூன் நறுக்கின கொத்தமல்லி தழை

  • 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்

  • தேவையான அளவு தண்ணீர்

Preparation

  • தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.மாங்காய், தேங்காயை சிறிய துண்டுகளாக நறுக்கவும்.

  • சென்னாவை இரவே ஊற வைக்கவும்.மறுநாள் வேறு வெதுவெதுப்பான தண்ணீர், உப்பு, ம.தூள் போடவும்.

  • அடுப்பை மிதமான தீயில் வைத்து ஊறின சென்னாவை குக்கரில் 2 விசில் விட்டு குழையாமல் வேக வைத்துக் கொள்ளவும்.

  • வெந்ததும் தண்ணீரை வடித்து விட்டு ஆற விடவும்.

  • சிறிய மிக்ஸி ஜாரில், ப.மிளகாய், இஞ்சியை அரைத்துக் கொள்ளவும்.

  • அடுப்பை மிதமான தீயில் வைத்து கடாயில் தே.எண்ணெய் காய்ந்ததும், கடுகு, வெடித்ததும், உ.பருப்பு, க.பருப்பு, போட்டு சிவந்ததும், அரைத்த விழுதை போட்டு நன்கு வதக்கவும்.

  • வதங்கியதும், மாங்காயை போடவும்.

  • பிறகு வெந்த சென்னா, உப்பு போட்டு வதக்கினதும் அடுப்பை நிறுத்தி விடவும்.

  • கடைசியாக கறிவேப்பிலை, கொத்தமல்லி போட்டு இறக்கவும்.

  • இப்போது சுவையான சுலபமான பீச் சுண்டல் தயார்.தே.எண்ணெயில் செய்வதால் கூடுதல் சுவை.

bottom of page