top of page

கேழ்வரகு பிரவுனி

Prep Time:

20 Minutes

Cook Time:

30 Minutes

Serves:

4 Servings

Level:

Advanced

About the Recipe

கேழ்வரகில் இயற்கையாகவே இரும்புச்சத்து உள்ளது. இதனால் இதனை அதிகம் உண்பது, இரத்த சோகை நோயை குணப்படுத்த உதவுகிறது. உடலை ஓய்வு பெற செய்யும். மேலும் இது கவலை, மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மையை போக்க உதவுகிறது. அதுமட்டுமின்றி ஒற்றை தலைவலியில் இருந்தும் நிவாரணம் அளிக்கிறது.

Ingredients

  • 2 முட்டை

  • 1/2 கப் சர்க்கரை

  • 3/4 கப் சன்பிளவர் ரீபைண்ட் ஆயில்

  • 1/2 கப் கோகோ பவுடர்

  • 1 டேபிள் ஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ்

  • 1/4 டேபிள் ஸ்பூன் பேக்கிங் பவுடர்

  • 1/2 டேபிள் ஸ்பூன் காபித்தூள்

  • 3/4 கப் கேழ்வரகு மாவு

  • 1/4 கப் நறுக்கிய சாக்லேட் துண்டுகள்

  • சிசீலிங் தட்டு

  • 2 ஸ்கூப் ஐஸ்க்ரீம்

  • 3 டேபிள் ஸ்பூன் சாக்லெட் சாஸ்

Preparation

  • ஒரு பாத்திரத்தில் இரண்டு முட்டை, 1/2 கப் சர்க்கரை, 3/4 கப் சன்ஃபிளவர் ரீஃபைண்ட் ஆயில் சேர்த்துக் கொள்ளவும்.

  • பின்னர் அதில் 1/2 கப் கோகோ பவுடர் சேர்த்து நன்றாக சர்க்கரை கரையும் வரை கலந்து கொள்ளவும்.

  • இதில் 1 டேபிள் ஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ், 1/4 டேபிள் ஸ்பூன் பேக்கிங் பவுடர், 1/4 டீ ஸ்பூன் உப்பு, 1/2 டேபிள் ஸ்பூன் காபி பவுடர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

  • இப்பொழுது இதில் 3/4 கப் கேழ்வரகு மாவு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

  • இதனுடன் 1/4 கப் சிறிதாக நறுக்கிய சாக்லெட் துண்டுகளை சேர்த்து கலந்து கொள்ளலாம்.

  • இப்பொழுது அதை ஒரு கேக் டின்னில் மாற்றிக் கொள்ளவும். (கேக்டின் மேல் பேக்கிங் ஷீட் போட்டுக் கொள்ளவும்)

  • இதை ஓவனில் 180°C 25 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை பேக் செய்து கொள்ளவும்.

  • கேழ்வரகு பிரவுனி தயார்.

  • இப்பொழுது சிசீலிங் தட்டை சூடுபடுத்திய பின் அதன் மேல் ஒரு பிரவுனி துண்டு வைத்துக் கொள்ளவும். அதனுடன் ஐஸ்கிரீம் மற்றும் சாக்லெட் சாஸ் சேர்த்து பரிமாறவும்.

bottom of page