top of page

குதிரைவாலி கேரட், முட்டைகோஸ் சாதம்

Prep Time:

30Minutes

Cook Time:

12Minutes

Serves:

8Servings

Level:

Beginner

About the Recipe

உடல் சூட்டினால் ஏற்படக்கூடிய மூல வியாதியும் சரிப்படுத்தக்கூடிய ஆற்றல் குதிரைவாலிக்கு உண்டு.

Ingredients

  • 3 கப் குதிரைவாலி சாதம்

  • 2 கேரட்

  • 1 கப் முட்டைக்கோஸ்

  • 1 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது

அரைக்க

  • 1 தக்காளி

  • 8 பல் பூண்டு

  • 1 சிறிய துண்டு இஞ்சி

  • 1 ஸ்பூன் கரமசாலா தூள்

  • 1/4 ஸ்பூன் சோம்பு

  • 1 பட்டை கிராம்பு

தாளிக்க

  • 1/2 கப் எண்ணெய்

  • 1 ஸ்பூன் கடுகு,உளுத்தம்பருப்பு

  • கறிவேப்பிலை கொத்தமல்லி தழை சிறிது

  • உப்பு தேவையானஅளவு

Preparation

  • கேரட் துருவிக் கொள்ளவும் முட்டைக்கோஸ் பொடியாக நறுக்கவும்.

  • பூண்டு இஞ்சி சோம்பு பட்டை கிராம்பு தக்காளி கரமசாலா தூள் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.

  • வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு கறிவேப்பிலை தாளித்து வெங்காயத்தை வதக்கி பின் அரைத்த விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.

  • அடுத்து உப்பு மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். பின்னர் காய்கறிகள் சேர்த்து நன்கு வதக்கவும்.

  • சிறிய தியில் வைத்து அரை பதம் வேக வைக்கவும்.

  • குதிரைவாலி சாதத்தை சேர்த்து நன்கு கலந்து கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

  • சுவையான குதிரை வாலி கேரட் முட்டைகோஸ் சாதம் தயார்.

bottom of page