top of page

குதிரைவாலி லட்டு

Prep Time:

20Minutes

Cook Time:

4Minutes

Serves:

6Servings

Level:

Beginner

About the Recipe

நார்ச்சத்து மற்றும் இரும்புச்சத்து குதிரைவாலி அரிசியில் அடங்கியுள்ளது. ஆகையால் மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் இந்த குதிரைவாலி அரிசியை நாள்தோறும் சமைத்து சாப்பிட்டால் தீர்வு கிடைக்கும். மேலும் மூலப் பிரச்சனைக்கு குதிரைவாலி அரிசியை ஆய்வுகள் பரிந்துரை செய்கின்றன.

Ingredients

  • 1 கப் குதிரைவாலி

  • 1 கப் வெல்லம் / நாட்டு சர்க்கரை (தரத்தை பொறுத்து அளவு மாறுபடும்)

  • 2 ஸ்பூன் தேன்

  • 20 சீவிய பாதாம்பருப்பு

  • 4 ஸ்பூன்  தேங்காய்த் துருவல்

  • 4 ஸ்பூன் பசுநெய் (தேவைபட்டால் பயன்படுத்தலாம்)

Preparation

  • வெறும் கடாயில் சுத்தம் செய்த ஒரு கப் குதிரைவாலியை வறுத்துக் கொள்ளவும். ஆறியதும் மிக்ஸியில் பொடிக்கவும். 

  • ஒரு கட்டி அல்லது தேவையான அளவு கருப்பு வெல்லத்தைத் தூளாக்கிக்கொள்ளவும் அல்லது நாட்டுசர்க்கரையை எடுத்துக்கொள்ளவும்.

  • குதிரைவாலி மாவு, வெல்லத்தூளுடன், தேன், சீவிய பாதாம் , தேங்காய்த் துருவல் சேர்த்து, சிறிது சூடான பசுநெய் விட்டு உருண்டைகளாகப் பிடித்து வைக்கவும். அவ்வளவுதான் குழந்தைகள் விரும்பும் சுவையான சத்தான குதிரைவாலி லட்டு தயார்.

bottom of page