top of page

குதிரைவாலி ராகி தோசை

Prep Time:

15Minutes

Cook Time:

4Minutes

Serves:

3Servings

Level:

Beginner

About the Recipe

குதிரை வாலி அரிசியில் பாலிபினால்கள் போன்ற ஏராளமான பைட்டோ கெமிக்கல்கள் உள்ளன. அவை ஆக்ஸிஜனேற்றிகளாகவும் நச்சுத்தன்மை முறிக்கும் தன்மை உடையதாகவும் செயல்படுகின்றன.

Ingredients

  • குதிரைவாலி அரிசி - 200 கிராம்

  •  ராகி - 100 கிராம்

  •  உளுந்து - 2 டேபிள்ஸ்பூன்

  •  பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை

  •  கறிவேப்பிலை - சிறிதளவு

  •  வெந்தயம் - 2 டீஸ்பூன்

  •  நெய் (அ) நல்லெண்ணெய் - தேவையான அளவு

  • உப்பு - தேவையான அளவு

Preparation

  • குதிரைவாலி அரிசி, ராகியை தண்ணீரில் 5 மணி நேரமும், வெந்தயம், உளுந்தை ஒரு மணி நேரமும் தனித்தனியாக ஊறவைத்து தனியாக அரைக்கவும்.

  • எல்லா மாவையும் ஒன்றாகக் கலக்கவும். இதில் தேவையான உப்பு, நறுக்கிய கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை சேர்க்கவும். 3 முதல் 5 மணி நேரம் புளிக்க வைக்கவும்.

  • தோசைக்கல்லை சூடாக்கி, மாவை தோசைகளாக ஊற்றி, நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும். இது மிகவும் சத்தான தோசை.

bottom of page