top of page

குதிரைவாலி பொங்கல்

Prep Time:

3Minutes

Cook Time:

25Minutes

Serves:

6Servings

Level:

Beginner

About the Recipe

பொதுவாக சர்க்கரை நோய் ஏற்பட காரணமாக இருப்பது நாம் அதிக அளவில் கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை உண்பது தான். குதிரைவாலி அரிசியை பொறுத்தவரை இதில் நார்சத்து மற்றும் புரதசத்து அதிக அளவில் உள்ளது. இன்று சர்க்கரை நோயாளிகள் பலர் அரிசி உணவிற்கு மாற்றாக கோதுமையை தான் உண்டு வருகின்றனர். ஆனால் கோதுமையை காட்டிலும் இந்த குதிரைவாலி அரசி தான் உடலில் அதிக அளவில் உடனே சர்க்கரை சேராமல் இருக்க உதவுகிறது. ஆகையால் சர்க்கரை நோயாளிகள் இதை உன்ன முயற்சிக்கலாம்.

Ingredients

  • 1 கப் குதிரைவாலி அரிசி

  • 1/2 கப் பாசிப்பருப்பு

  • மிளகு – 1 ஸ்பூன்

  • சீரகம் – 1 ஸ்பூன்

  • பெருங்காயப் பொடி – 1/2 ஸ்பூன்

  • பச்சை மிளகாய்  1

  • உப்பு தேவையான அளவு

  • நெய் – 1 ஸ்பூன்


Preparation

  • முதலில் குக்கரை அடுப்பில் வைத்து கொள்ளுங்கள். அதில் பாசிப்பருப்பை போட்டு 2 நிமிடம் வறுத்து கொள்ளுங்கள். அதன் பின்பு வறுபட்டு கொண்டிருக்கும் பாசிப்பருப்புடன் குதிரைவாலி அரிசியையும் சேர்த்து ஒரு நிமிடம் வறுத்து இந்த அரிசியையும் பருப்பையும் தண்ணீர் ஊற்றி கழுவி அதன் பின்பு, பொங்கல் வைப்பதற்கு தேவையான அளவு(4 1/2 டம்ளர் ) தண்ணீரை ஊற்றி, இந்த குக்கரை அடுப்பில் வைத்து விடவேண்டும்.

  • அடுத்தபடியாக இதோடு மிளகு , சீரகம், பெருங்காயப் பொடி, பச்சை மிளகாய் , உப்பு , நெய் ஊற்றி நன்றாக இந்த பொருட்களை எல்லாம் கலந்து விட்டு, ஒரு கொதி வரும் வரை காத்திருக்க வேண்டும். குக்கரில் நாம் சேர்த்த பொருட்கள் அனைத்தும் சேர்ந்து கொதித்து வந்தவுடன் குக்கரை மூடி மிதமான தீயில் 3 விசில் விடுங்கள். அவ்வளவு தான் விசில் வரட்டும். பிரஷர் அடங்கட்டும்.

  • சுடசுட இந்த பொங்கலை சட்னி சாம்பாருடன் பரிமாறிபாருங்க. அட்டகாசமான சுவை.

bottom of page