top of page

குதிரைவாலி புட்டு

Prep Time:

25Minutes

Cook Time:

15Minutes

Serves:

6Servings

Level:

Intermediate

About the Recipe

குதிரைவாலி அரிசியை தொடர்ந்து உணவாக உண்டு வந்தால் நீர் கடுப்பு பிரச்சனை நீங்கும். அதே சமயம் சிறுநீரை பெருக்குவதோடு உடலில் உள்ள தேவையற்ற உப்புகள் மற்றும் கழிவுகளை அகற்றவும் இது உதவுகிறது. மேலும் சிறுநீர் பாதையில் ஏற்படும் புண்கள், கட்டிகளை அகற்றும் திறன் இந்த குதிரைவாலி அரிசிக்கு உண்டு.

Ingredients

  • 1/4 கி குதிரைவாலி அரிசி

  • 1 கப் துருவிய தேங்காய்

  • 3 ஏலக்காய்

  • 1 கப்நாட்டு சர்க்கரை அல்லது சீனி

  • தேவையான அளவு உப்பு

Preparation

  • குதிரைவாலி அரிசியை 2 மணி நேரம் ஊற வைத்து பின் தண்ணீரை வடித்து வெள்ளை துணியில் ஈரபதம் போகும் வரை காய விடவும்


  • பின்னர் மிக்ஸியில் போட்டு ஏலக்காய் சேர்த்து பவுடர் போல அரைத்து கொள்ளவும்


  • அரைத்த பொடியை ஒரு பாத்திரத்தில் மாற்றி தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்


  • விரல்களால் புட்டு மாவை பிடித்து பின் உடைத்தால் மறுபடியும் மாவு போல் வர வேண்டும். இதுவே சரியான புட்டு மாவு பதம், மற்றும் மாவின் ஈரபதம் கைகளால் உணர முடியும்.


  • புட்டு மாவை இட்லி தட்டில் கொட்டி 10-15 நிமிடம் வேக விடவும்


  • 10 நிமிடம் கழித்து திறந்து புட்டு வெந்துள்ளதா என பார்த்து இறக்கவும்.(இரு விரல்களுக்கு இடையில் நசுங்கினால் விரல்களில் ஒட்டாமல் இருந்தால் புட்டு வெந்துள்ளது என அர்த்தம்)


  • தேவையான அளவு தேங்காய் துருவல் மற்றும் நாட்டு சர்க்கரை அல்லது சீனி சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்

bottom of page