top of page

குதிரைவாலி தேங்காய் பாத்

Prep Time:

25Minutes

Cook Time:

10Minutes

Serves:

3Servings

Level:

Beginner

About the Recipe

குதிரைவாலி அரிசியில் கார்போஹைட்ரேட் குறைந்த அளவில் உள்ளதாலும் எளிதில் செரிமானமாக கூடியதாக இருப்பதாலும் குதிரைவாலி அரிசி குறைந்த கிளைசெமிக் குறியீட்டு உணவாக கருதப்படுகிறது.

Ingredients

  • 1 கப் உதிரியாக வேக வைத்த குதிரைவாலி அரிசி

  • 1/2 கப் தேங்காய் துருவல்

  • 2 டேபிள்ஸ்பூன் உளுத்தம் பருப்பு

  • 1 டேபிள்ஸ்பூன் கடலை பருப்பு

  • 4 பொடியாக நறுக்கின பச்சை மிளகாய்

  • 2 வரமிளகாய்

  • 2 டேபிள்

    ஸ்பூன் தேங்காய் எண்ணெய்

  • 1 ஸ்பூன் கடுகு

  • தேவையான அளவு கறிவேப்பிலை, பெருங்காயம், உப்பு

Preparation

  • முதலில் குதிரைவாலி அரிசியை குழையாமல் உதிரியாக வேக வைத்து எடுத்து ஆற வைக்கவும்.


  • ஒரு வாணலி ஸ்டவ்வில் வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து வறுக்கவும்.


  • அத்துடன் வரமிளகாய், பச்சமிளகாய், கறிவேப்பிலை

    சேர்த்து வறுத்து பிறகு தேங்காய் துருவல் சேர்த்து சிவக்காமல் வறுக்கவும்.


  • அத்துடன் குதிரைவாலி அரிசி சேர்த்து கலந்து நன்கு கிளறவும்,தேங்காயுடன் சேர்ந்து நன்கு கலந்ததும் ஸ்டவ் ஆப் செய்து விடவும்.


  • சுவையான குதிரை

    வாலி தேங்காய் பாத் தயார். மேல் நெய்யில் வறுத்த முந்திரி, கருவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தொட்டுக்கொள்ள துவையல், அப்பளத்துடன் சூடாக சாப்பிடவும்.

bottom of page