top of page

குதிரைவாலி சாம்பார் சாதம்

Prep Time:

10Minutes

Cook Time:

30Minutes

Serves:

8Servings

Level:

Beginner

About the Recipe

மழைக்காலத்தில் பெரும்பாலான மக்கள் சளி, இருமல், காய்ச்சல் போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு முக்கிய காரணமாக உடலில் ஏற்படக் கூடிய தொற்று மற்றும் பருவநிலை மாற்றம் தான். சளி இருமலுக்கு குதிரைவாலி அரிசியும் ஒருவகையில் சிறந்த தீர்வாக உள்ளது. மேலும் சுவாசக் கோளாறு பிரச்சனை உள்ளவர்களும் இதை தொடர்ந்து உண்டு வந்தால் பலன் ஏற்படுகிறது.

Ingredients

  • 1/4 கிலோ குதிரைவாலி அரிசி

  • 100 கிராம் துவரம் பருப்பு

  • 150 கிராம் நறுக்கிய காய்கறிகள்

  • 1 மேஜைகரண்டி சாம்பார் தூள்

  • 1 குழிகரண்டி எண்ணெய்

  • 1/2 தேக்கரண்டி சீரகம்

  • 1/2 தேக்கரண்டி கடுகு

  • 1 கொத்து கருவேப்பிலை

  • 1/2 தேக்கரண்டி மிளகு

  • 4 காய்ந்த மிளகாய்

  • 1 பெரிய வெங்காயம்

  • 15 சின்ன வெங்காயம்

  • 5 பல் பூண்டு

  • 2 தக்காளி

  • 1 மேஜைகரண்டி புளி கரைசல்

  • 1 மேஜைகரண்டி நிலக்கடலை

  • 1/4 கப் கொத்தமல்லி இலைகள்

  • 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்

  • 1 லிட்டர் தண்ணீர்

  • தேவையானஅளவு உப்பு

Preparation

  • குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடு ஏறியதும் கடுகு, கருவேப்பிலை சீரகம், மிளகு, நிலக்கடலை காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும். பிறகு நறுக்கிய வெங்காயம் கூடவே இரண்டாக நறுக்கிய பூண்டு சின்ன வெங்காயம் இவற்றை சேர்க்கவும்.

  • பூண்டு வெங்காயம் வதங்கிய பின் நறுக்கிய தக்காளி, நறுக்கி வைத்துள்ள காய்கறிகள், கொஞ்சமாக உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும். கூடவே கழுவிய குதிரைவாலி அரிசி மற்றும் துவரம் பருப்பு சேர்த்து மஞ்சள் தூள் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.

  • கடைசியாக தண்ணீர்(1:3) ஊற்றி சாம்பார் தூள் சேர்த்து மூடி போட்டு குக்கரில் ஆவி வந்தபின் விசில் போட்டு சிறு தீயில் பத்து நிமிடம் வேக வைக்கவும்.

bottom of page