top of page

குதிரைவாலி குஸ்கா

Prep Time:

15Minutes

Cook Time:

30Minutes

Serves:

7Servings

Level:

Beginner

About the Recipe

வளரும் குழந்தைகளுக்கு தேவைப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட், பாஸ்பரஸ், கால்சியம், நார்ச்சத்து, புரதச்சத்து, இரும்புச்சத்து போன்றவை குதிரைவாலி அரிசியில் அதிகமாக காணப்படுகிறது. வளரும் குழந்தைகளுக்கு குதிரைவாலி அரிசியை தினசரி உணவாக கொடுத்து வந்தால் நாள் முழக்க சுறுசுறுப்பாகவும், ஆற்றலுடனும் இருப்பார்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

Ingredients

  • நெய் – 2 டேபிள் ஸ்பூன்

  • எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

  • பிரியாணி இலை – 2

  • பட்டை – 1

  • ஏலக்காய் -3

  • கிராம்பு – 4

  •  சோம்பு – 1

  • உப்பு – தேவையான அளவு

  • இஞ்சி பூண்டு விழுது – தேவையான அளவு

  • மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்

  • மிளகாய்த்தூள் – 1

  • டீஸ்பூன் கரம் மசாலா – 1

  • டீஸ்பூன் தக்காளி – 2

  • குதிரைவாலி  அரிசி – 2 கப்

  • புதினா இலை – சிறிதளவு

  • கொத்தமல்லி – சிறிதளவு  

Preparation

  • முதலில் ஒரு குக்கரில் நெய் விட்டு அதனுடன் எண்ணெய் சேர்க்க வேண்டும். பிறகு பிரியாணி இலை, பட்டை, ஏலக்காய்,கிராம்பு, சோம்பு மற்றும் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு இஞ்சிப்பூண்டு விழுது மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

  • பிறகு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா மற்றும் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் தக்காளி நன்றாக குழைந்த பிறகு 1/2 மணிநேரம் ஊறவைத்த குதிரைவாலி அரிசியினை சேர்த்து நன்றாக கிளறி 4 கப் தண்ணீர் சேர்த்து புதினா இலை மற்றும் கொத்தமல்லி இலை சேர்க்கவும்.

  • பிறகு அதனுடன் உப்பு தேவையான அளவு சேர்த்து கலந்து குக்கரை மூடி 1 விசில் வரை விட்டு இறக்கினால் சுவையான குஷ்கா தயார்.

bottom of page