top of page

குதிரைவாலி இடியாப்பம்

Prep Time:

20Minutes

Cook Time:

10Minutes

Serves:

4Servings

Level:

About the Recipe

உடலிற்கு தேவையான இரும்புச் சத்துக்களை நிறைய தருகிறது.
குதிரை வாலியில் உள்ள ஊட்டச்சத்து உள்ளடக்கம் குறித்த ஆராய்ச்சியின் படி, சில வகையான குதிரை வாலி அரிசியில் அதிக அளவு இரும்புச்சத்து இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. 100 கிராம் குதிரை வாலி அரிசியில் 18.6 மி.கி இரும்பு சத்து இருப்பதாக கண்டறியப் பட்டுள்ளது. இது அனைத்து தானியங்களில் உள்ள இரும்பு சத்தை விட அதிகமாகும்.

Ingredients

  • குதிரைவாலி அரிசி அரை கிலோ

  •  உப்பு ஒரு தேக்கரண்டி

  • நல்லெண்ணெய் ஒரு தேக்கரண்டி

  • தேங்காய்த்துருவல் கால் கப்

  • நாட்டுச் சர்க்கரை 4 மேஜைக்கரண்டி

Preparation

  • குதிரைவாலி அரிசியைக் கழுவி ஒரு மணி நேரம் ஊறவைத்து, பின் நீரை வடித்துவிட்டு நிழலில் ஆறவிட்டு மெஷினில் கொடுத்து மாவாக அரைத்துக்கொள்ளவும்.

  • ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு மாவு எடுத்து வெதுவெதுப்பான நீரில் எண்ணெய், உப்பு சேர்த்து சிறிது சிறிதாக ஊற்றிப் பிசைந்துகொள்ளவும்.

  • இடியாப்ப அச்சில் மாவைப் போட்டுப் பிழிந்து, ஆவியில் வேகவிட்டு எடுத்தால், இடியாப்பம் தயார்.

  • தேங்காய்ப்பால் காம்பினேஷன் நன்றாக இருக்கும்.

bottom of page