top of page

கருப்பு கவுனி தயிர்சாதம்

Prep Time:

10 Minutes

Cook Time:

45 Minutes

Serves:

4 Servings

Level:

Beginner

About the Recipe

கருப்பு அரிசியில் அதன் நிறமே அந்தோசயானின் என்னும் நிறமியின் காரணமாக வருகிறது.
கருப்பு கவுனி அரிசியில் ஆண்டி ஆக்சிடென்ட் நார்ச்சத்து மிகுந்து காணப்படுகிறது. இது உடலில் இருக்கக்கூடிய தேவையில்லாத கொலஸ்ட்ராலை கரைத்து வெளியேற்றும் குறிப்பாக உடலில் இருக்கக்கூடிய கெட்ட கொழுப்புகளை கரைத்து நல்ல கொழுப்பின் அளவு அதிகரிக்கும். இருதயம் சார்ந்த பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.
புற்றுநோய் ஏற்படும் காரணிகளை கட்டுப்படுத்துகிறது பெண்களுக்கு ஏற்படக்கூடிய மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் வராமல் தடுக்கும்.

Ingredients

  • 1 டம்ளர் கருப்புகவுனிஅரிசி

  • 3 டம்ளர் தண்ணீர்

  • அரை டம்ளர் பால்

  • 2 டம்ளர் தயிர்

  • தேவைக்கேற்ப உப்பு

Preparation

  • கருப்புகவுனி அரிசியை இரவு ஊற வைத்து காலையில் வெண்கலபானை அல்லது மண்பானையில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு உலை கொதிச்சதும் அரிசியை போட்டு ஓரளவு வெந்த பிறகு பால் ஊற்ற வேண்டும்.

  • பதமா வெந்த பிறகு கொஞ்சம் ஆற வைத்து தயிரும், உப்பும் சேர்த்து கலந்துவச்சுடுங்க.  உடனே சாப்பிடுறதுன்னா  நிறைய தயிர் ஊத்திக்கலாம். கொஞ்சம் தாமதமா சாப்பிடுறதுன்னா தயிர் கொஞ்சம் குறைச்சே சேத்துக்கலாம்.

  • ஆரோக்கியமும் சுவையும் நிறைந்த கருப்புகவுனி தயிர்சாதம் தயார். மாதுளம்பழம் தூவி சாப்பிட்டா இன்னும் அருமையாக இருக்கும். வறுவல் எல்லாமே தொட்டுக்க நல்லா இருக்கும்.

bottom of page