top of page

கருப்பு கவுனி அரிசி லட்டு

Prep Time:

15 Minutes

Cook Time:

15 Minutes

Serves:

6 Servings

Level:

Beginner

About the Recipe

கருப்பு அரிசியில் அதன் நிறமே அந்தோசயானின் என்னும் நிறமியின் காரணமாக வருகிறது. ஆண்டி ஆக்சிடென்ட் நார்ச்சத்து மிகுந்து காணப்படுகிறது. இது உடலில் இருக்கக்கூடிய தேவையில்லாத கொலஸ்ட்ராலை கரைத்து வெளியேற்றும் குறிப்பாக உடலில் இருக்கக்கூடிய கெட்ட கொழுப்புகளை கரைத்து நல்ல கொழுப்பின் அளவு அதிகரிக்கும். இருதயம் சார்ந்த பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.
புற்றுநோய் ஏற்படும் காரணிகளை கட்டுப்படுத்துகிறது பெண்களுக்கு ஏற்படக்கூடிய மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் வராமல் தடுக்கும்.

Ingredients

  • 1 கப் கருப்பு கவுனி அரிசி

  • 1/4 கப் துருவிய பாதாம், முந்திரி நிலக்கடலை

  • பசு நெய்

  • 3/4 கப் நாட்டு சர்க்கரை

Preparation

  • கருப்பு கவுனி அரிசியை மாவாக நன்கு அரைத்துக் கொள்ளவும்.

  • பின் அதை வெறும் வாணலியில் சிறுதீயில் வைத்து வாசனைவரும் வரை வறுத்துக்கொள்ள வேண்டும்.

  • பின் துருவிய முந்திரி பாதாம் நிலக்கடலை கலவையை லேசாக வாசனை வரும் வரைவறுக்கவும்.

  • இந்த கலவைகள் சூடாக இருக்கும் பொழுதே பொடித்த நாட்டுசர்க்கரை கலந்து நெய்யை உருக்கி ஊற்றி சுடச்சுட சிறு உருண்டைகளாக பிடித்து எடுக்க வேண்டும்.

  • கருப்பு நிற அரிசியான கவுனி அரிசியில் சத்தான சுவையான லட்டு தயார்.

bottom of page