top of page

கருப்பு கவுனி அரிசி புட்டு

Prep Time:

20Minutes

Cook Time:

15Minutes

Serves:

3Servings

Level:

Intermediate

About the Recipe

கவுனிகளை தொடர்ந்து உட்கொள்வது செரிமானத்திற்கு உதவுகிறது, ஏனெனில் அவை அமிலேஸ், புரோட்டீஸ் மற்றும் லிபேஸ் போன்ற நொதிகளைக் கொண்டுள்ளன. இந்த நொதிகள் முறையே புரதங்கள், கொழுப்புகள் மற்றும் கார்போ ஹைட்ரேட்டுகளை உடைக்கின்றன.

Ingredients


  • 1 கப் கவுனி அரிசி மாவு

  • 3/4 கப் நாட்டு சர்க்கரை

  • 1/2 கப் தேங்காய்

  • 2 டேபிள் ஸ்பூன் நெய்

  • 8-10 முந்திரி

  • 1/2 டீ ஸ்பூன் ஏலக்காய் தூள்

  • ஒரு சிட்டிகை உப்பு

Preparation

  • ஒரு பவுலில் அரிசி மாவு சேர்த்து உப்பு மற்றும் வெந்நீர் விட்டு தெளித்து நன்கு பிசையவும். (கருப்பு கவுனி அரிசியை 2 மணி நேரம் தண்ணீரில் ஊற விட்டு ஈரம் போக காய வைத்து ஸ்டவ்வில் வாணலியில் வாசம் வரும்வரை வறுத்து ஆற விட்டு பொடித்த மாவு)

  • கையில் பிடித்தால் பிடிக்க வரணும், விடும்போது உதிர்ந்துந்துடனும் இதுதான் பக்குவம்.

  • ஸ்டவ்வில் கரண்டி வைத்து நெய் ஊற்றி முந்திரி, தேங்காய் சேர்த்து வறுத்து எடுத்துக்கவும்.ஸ்டவ்வில் இட்லி பாத்திரம் வைத்து சூடானதும் இடியாப்ப தட்டில் பிசைந்து வைத்திருக்கும் மாவை எடுத்து வைத்து 15 நிமிடம் மிதமான சூட்டில் மூடி வைத்து ஆவியில் வேக விடவும்.

  • அதன் பிறகு சூடு மாவை எடுத்து வேறொரு பாத்திரத்தில் போட்டு சூடு ஆறினதும் அத்துடன் தேங்காய் துருவல், ஏலக்காய் பொடி சேர்த்து கலக்கவும்.

  • அத்துடன் நாட்டுச்சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து, நெய்யில் வறுத்த முந்திரி சேர்க்கவும்.

  • கடைசியாக ஒரு டேபிள்ஸ்பூன் நெய் விட்டு எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கலந்து விட்டால் அருமையான ருசியில் ஆரோக்கியமான கருப்பு கவுனி அரிசி வெல்ல புட்டு தயார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள், செய்து குடுத்து சுவைக்கவும்.

bottom of page