top of page

கருப்பு கவுனி அரிசி பால் பாயாசம்

Prep Time:

5Minutes

Cook Time:

35Minutes

Serves:

5Servings

Level:

Intermediate

About the Recipe

இரும்புச்சத்து குறைபாடு சோர்வு மற்றும் பலவீனத்தை ஏற்படுத்துகிறது. உங்கள் உணவில் மிகவும் தேவையான இரும்புச்சத்தை பெற கவுனிகளை உட்கொள்ளுங்கள்.

Ingredients

  • 1/2 கப் கருப்பு கவுனி

  • 3/4 கப் சர்க்கரை

  • 3 கப் பால்

  • 2 டீ ஸ்பூன் நெய்

  • முந்திரி, ஏலக்காய்

Preparation

  • முதலில் கவுனி அரிசியை நன்கு கழுவி அதன் பிறகு 8 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.

  • ஒரு குக்கரில் கவுனி அரிசி, 3 பங்கு தண்ணீர் (1கப் பால் + 2கப் தண்ணீர் )விட்டு மீடியம் ஹீட்டில் 6-7 விசில் விட்டு ஸ்டவ் ஆப் செய்து விடவும்.

  • பிரஷர் போன பிறகு குக்கரை திறந்து பார்த்தால் நன்றாக வெந்திருக்கும். அதை சூடாக இருக்கும்போதே நன்றாக மசித்து விட்டு அத்துடன் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து நன்றாக கிளறிவிடவும்.

  • அதன் பிறகு சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி,அத்துடன் மீதி பால் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக சிம்மில் வைத்து கொதிக்க விட்டு ஸ்டவ் ஆப் செய்து கீழே இறக்கி விடவும்.

  • கடைசியாக நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து பரிமாறவும். மிக ஆரோக்கியமிக்க சுவையுடன் கூடிய கருப்பு கவுனி பால் பாயாசம் தயார். சுவைத்து ரசிக்கவும்.

bottom of page