top of page

கருப்பு கவுனி அரிசி பாயாசம்

Prep Time:

15 Minutes

Cook Time:

30 Minutes

Serves:

6 Servings

Level:

Beginner

About the Recipe

மன்னர்கள் சாப்பிட்ட அரிசி.
கருப்பு அரிசியில் அதன் நிறமே அந்தோசயானின் என்னும் நிறமியின் காரணமாக வருகிறது.
கருப்பு கவுனி அரிசியில் ஆண்டி ஆக்சிடென்ட் நார்ச்சத்து மிகுந்து காணப்படுகிறது. இது உடலில் இருக்கக்கூடிய தேவையில்லாத கொலஸ்ட்ராலை கரைத்து வெளியேற்றும் குறிப்பாக உடலில் இருக்கக்கூடிய கெட்ட கொழுப்புகளை கரைத்து நல்ல கொழுப்பின் அளவு அதிகரிக்கும். இருதயம் சார்ந்த பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.
புற்றுநோய் ஏற்படும் காரணிகளை கட்டுப்படுத்துகிறது.

Ingredients

  • 200 கிராம் கருப்புகவுனிஅரிசி

  • 1 லிட்டர் காய்ச்சிய பால்

  • 3 ஸ்பூன் நெய்

  • 10 முந்திரி

  • 4 ஏலக்காய்

  • 10 உலர்ந்த திராட்சை

  • 150 கிராம் வெல்லம்

Preparation

  • கருப்புகவுனி அரிசியை சுத்தம் செய்து ஒரு கடாயில் சேர்த்து மனம் வரும் வரை மிதமான தீயில் வறுக்கவும்.

  • வறுத்த அரிசியை ஆற வைத்து ஒன்றும், பாதியுமாக மிக்ஸியில் அரைக்கவும்.

  • பொடித்த அரிசியை குக்கரில் சேர்த்து இரண்டு மடங்கு தண்ணீர் விட்டு 3 விசில் விட்டு ஆறவிடவும்.

  • ஒரு பாத்திரத்தில் வெல்லம் சேர்த்து அது மூழ்கும் வரை தண்ணீர் விட்டு பாகுகாய்ச்சவும்.

  • ஒரு கடாயில் நெய் விட்டு முந்திரி திராட்சை சேர்க்கவும். இதனை சிறிய தீயில் பொன்னிறமாக வறுக்கவும்.

  • இதனை வேக வைத்துள்ள கவுனி அரிசியில் சேர்க்கவும்., இதனுடன் வெல்லப்பாகையும் வடிகட்டி சேர்க்கவும்.

  • ஏலக்காய் பொடி சேர்த்து, நன்கு  கலந்து ஆறவிடவும்.

  • இளம்சூடாக இருக்கும் போது காய்ச்சிய பாலைசேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.

bottom of page