top of page

கருப்பு கவுனி அரிசி தோசை

Prep Time:

30Minutes

Cook Time:

3Minutes

Serves:

8Servings

Level:

Beginner

About the Recipe

கருப்பு கவுனியில் அதிக அளவு பொட்டாசியம் உள்ளது, இது இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. கொலஸ்ட்ரால் அளவையும் குறைத்து பக்கவாதம் வராமல் தடுக்கிறது.

Ingredients

  • 400 கிராம் கருப்பு கவுனி அரிசி

  • 100 கிராம்  உளுந்து பருப்பு

  • 1 டீ ஸ்பூன் வெந்தயம்

  • உப்பு

  • தேவையான அளவு ஆயில் (தோசை சுடுவதற்கு)

Preparation

  • 400 கிராம்  கருப்பு கவுனி அரிசியை கழுவி 4 மணி நேரம் தண்ணீரில் ஊறவிடவும். 100 கிராம் உளுந்து பருப்பை, 1 டீ ஸ்பூன் வெந்தயத்துடன் கழுவி நன்கு ஊறவிடவும்.

  • கிரைண்டரில் முதலில் ஊற விட்ட உளுந்து பருப்பை நன்கு அரைத்து எடுத்து வைக்கவும். அடுத்து ஊற வைத்த கருப்பு கவுனி அரிசியை நைசாக அரைத்து எடுத்து வைக்கவும்.

     

  • 1/2 கைப்பிடி உப்பு சேர்த்து அரைத்த உளுந்தையும் கவுனி அரிசி மாவையும் நன்கு கலக்கி மூடி வைக்கவும்.

     

  • மறுநாள் மாவு சிறிது பொங்கியவுடன் நன்கு கலக்கிவிட்டு தோசைக்கல்லை சூடேற்றி தோசையாக ஊற்றலாம்.

  •  

    ஆயில் சிறிது விட்டு இருபுறமும் பொன்னிறமாக தோசையை சுட்டு எடுக்கவும். கருப்பு கவுனி அரிசி தோசைக்கு வெங்காய சட்னி ஏற்றது.

bottom of page