top of page

கருப்பு கவுனி அரிசி கொலுக்கட்டை

Prep Time:

20Minutes

Cook Time:

12Minutes

Serves:

4Servings

Level:

Beginner

About the Recipe

நமது இரத்தத்தில் இருக்கின்ற பிரீ ராடிகல் எனப்படும் மூலக்கூறுகளால் ஏற்படுகின்ற நச்சுக்களை நீக்குகின்றது. மேலும் மனிதர்களின் கல்லீரலில் அதிகளவில் சேர்ந்திருக்கின்ற நச்சுக்களை வெளியேற்றி, கல்லீரலில் ஆரோக்கியமான செயல்பாட்டை உறுதி செய்கிறது.

Ingredients

  • 1 கப் கருப்பு கவுனி

  • 1 கப் தேங்காய் துருவல்

  • 1/2 கப் வெல்லம்

  • 2 ஏலக்காய்

Preparation

  • முதலில் அரிசியை ரவா போல் மிக்சியில் அரைக்கவும். ஒரு பவுலில் அரைத்த மாவு, துருவிய தேங்காய், ஏலக்காய் பொடி, பொடித்த வெல்லம் சேர்த்து தண்ணீர் ஊற்றி பிசையவும்.

  • மாவு கொஞ்சம் லூசாக இருக்கட்டும். கெட்டியாக இருக்க வேண்டாம். மாவை கொலுக்கட்டையாக பிடிக்கவும். பிறகு அதை இட்லி பானையில் தண்ணீர் கொதித்ததும் வேகவைக்கவும். பத்து நிமிடம் வேகவைத்தால் போதும். சூப்பரான கொலுக்கட்டை ரெடி.

bottom of page