top of page

கருப்பு கவுனி அரிசி கார பணியாரம்

Prep Time:

20Minutes

Cook Time:

10Minutes

Serves:

4Servings

Level:

Beginner

About the Recipe

கருப்பு கவுனி அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை ஆஸ்துமா நோயாளிகள் சாப்பிடுவதால் இந்த அரிசியில் உள்ள அந்தோசயனின் சத்துக்கள் ஆஸ்துமா நோயாளிகளின் நுரையீரலில் அதிகளவு சளி சுரப்பு ஏற்படாமல் தடுத்து, அவர்களுக்கு சிறிது நோய் நிவாரணம் அளிக்கின்றது.

Ingredients

  • 1/4கிலோ கருப்பு கவுனி அரிசி

  • 1/4கிலோ பச்சரிசி

  • 50கிராம் உளுந்து

  • 1டீஸ்பூன் கடுகு

  • 1டீஸ்பூன் உளுந்து

  • 1 டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பு

  • 2 பெரிய வெங்காயம்

  • 2 பச்சை மிளகாய்

  • ஒரு கொத்து கருவேப்பிலை

  • 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய்

  • தேவையான அளவு உப்பு

Preparation

  • கருப்பு கவுனி அரிசி,பச்சரிசி, உளுந்து மூன்றையும் ஒன்றாக போட்டு தண்ணீர் ஊற்றி மூன்று மணி நேரம் ஊற வைக்கவும்

  • அரிசி ஊறியதும் மிக்ஸியில் அல்லது கிரைண்டரில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கி கொள்ளவும்.

  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி,கடுகு, உளுந்து, கடலை பருப்பு,பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கருவேப்பிலை,சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கி அரைத்து வைத்துள்ள மாவுடன் சேர்க்கவும்.

  • பணியாரக் கல்லில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கலந்து வைத்த மாவை ஊற்றவும்,.....

  • அடுப்பை கம்மியான தீயில் வைத்து மூடி போட்டு நன்றாக வேக விடவும்.ஒரு பக்கம் வெந்தவுடன் திருப்பி போட்டு வேக விடவும்.

  • ஆரோக்கியமான கருப்பு கவுனி அரிசி கார பணியாரம், தேங்காய் சட்னியுடன் பரிமாற தயார்.

bottom of page