top of page

கருப்பு கவுனி அரிசி உப்புமா

Prep Time:

30Minutes

Cook Time:

25Minutes

Serves:

4Servings

Level:

Beginner

About the Recipe

கருப்பு கவுனி அரிசி உட்கொள்வது அறிவாற்றல் திறன்களை மேம்படுத்துகிறது. கவுனிகளை உட்கொள்வதால் நினைவாற்றல் மற்றும் செறிவு அதிகரிக்கும்.

Ingredients

  • 1கப் கவுனி அரிசி ரவை

  • 4 பச்சை மிளகாய்

  • ஒரு துண்டு இஞ்சி

  • 1 பொடியாக நறுக்கின வெங்காயம்

  • 1/4 கப் தேங்காய் துருவல்

  • 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்

  • உப்பு

  • தேவைக்கு கருவேப்பிலை

Preparation

  • முதலில் கவுனி அரிசியை நன்றாக 2-3 வாட்டி கழுவி காட்டன் துணியில் நன்றாக காய விட்டு, வெறும் வாணலியில் நன்கு வாசம் வரும் வரை வறுத்து ஆற விட்டு ரவை போல் மிக்ஸியில் பொடித்து வைக்கவும்.

  • ஒரு பவுலில் கவுனி ரவை, தேவையான உப்பு சேர்த்து தண்ணியை தெளித்து புட்டுக்கு பிசைவது போல் பிசைந்து ஆவியில் 10 நிமிடம் வேக விட்டு, உதிர்த்து வைத்துக்கவும்.

  • ஸ்டவ்வில் வானலி வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு ஒரு வரமிளகாய் சேர்த்து வறுத்து இஞ்சி பச்சைமிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

  • நன்கு வதங்கிய வெங்காயத்துடன் வேக விட்டு உதிர்த்து வைத்திருக்கும் கவுணி அரிசியை சேர்த்து, நன்றாக கிளறி விடவும்.

  • கடைசியா தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கலந்து கிளறி விடவும். சூப்பர்

    சுவையில் ஆரோக்கியமான கவுனி அரிசி உப்புமா சுவைக்க தயார். இதுக்கு தொட்டு சாப்பிட எதுவும் தேவை இருக்காது.. மிக டேஸ்டா இருக்கும்.

bottom of page