top of page

கருப்பு கவுனி அரிசி இட்லி

Prep Time:

30Minutes

Cook Time:

10 Minutes

Serves:

7 Servings

Level:

Beginner

About the Recipe

கருப்பு கவுனி அரிசியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் புற்றுநோய் செல்களை எதிர்த்து போராட உதவுகிறது. செல் சேதத்தை ஏற்படுத்தக்கூடிய ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்தும் இது பாதுகாக்கிறது.

Ingredients

  • 400 கிராம் கருப்பு கவுனி அரிசி

  • 100 கிராம்  உளுந்து பருப்பு

  • 1 டீ ஸ்பூன் வெந்தயம்

  • உப்பு

Preparation

  • 400 கிராம் கருப்பு கவுனி அரிசியை கழுவி 4 மணி நேரம் தண்ணீரில் ஊறவிடவும். 100 கிராம் உளுந்து பருப்பை, 1 டீ ஸ்பூன் வெந்தயத்துடன் கழுவி நன்கு ஊறவிடவும்.

  • கிரைண்டரில் முதலில் ஊற விட்ட உளுந்து பருப்பை நன்கு அரைத்து எடுத்து வைக்கவும். அடுத்து ஊற வைத்த கருப்பு கவுனி அரிசியை நைசாக அரைத்து எடுத்து வைக்கவும்.

  • 1/2 கைப்பிடி உப்பு சேர்த்து அரைத்த உளுந்தையும் கவுனி அரிசி மாவையும் நன்கு கலக்கி மூடி வைக்கவும்.

  • மறுநாள் மாவு சற்று புளித்தவுடன் இட்லி தட்டில் சிறிது நெய் தடவி, இட்லியாக ஊற்றி அடுப்பில் வைத்து ஆவியில் வேகவிடவும்.

  • வெந்தவுடன், பொட்டுக்கடலை தேங்காய் சட்னி செய்து பரிமாறினேன். அருமையாக இருந்தது.

bottom of page