top of page

கருப்பு கவுனி அரிசி ஆப்பம்

Prep Time:

20Minutes

Cook Time:

5Minutes

Serves:

9Servings

Level:

Intermediate

About the Recipe

கவுனிகள் உயர்தர புரதத்தின் சிறந்த மூலமாகும். அவற்றில் பெரும்பாலான தானியங்களை விட அதிக அளவு அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்கள் உள்ளன.

Ingredients

  • 2 கப் கருப்பு கவுனி அரிசி சோறு

  • 2 கப் பச்சரிசி

  • 1 மேஜைக்கரண்டி உளுந்து


  • 1 முட்டை

  • 1 குழிக்கரண்டி தேங்காய் கட்டிப்பால்

  • 2 தேக்கரண்டி எண்ணெய்

  • தேவைக்கேற்ப உப்பு

  • 1 சிட்டிகை சோடா உப்பு

  • 5 குழிக்கரண்டிகள் தண்ணீர்

Preparation

  • முதலில் நன்றாக ஊற வைத்த பச்சரிசியை உளுந்துடன் சேர்த்து அரைத்து பின்பு அத்துடன் கருப்பு கவுனி அரிசி சோறு போட்டு நன்றாக அரைக்கவும். இக் கலவையை நன்றாக கையால் கலக்கிவிட்டு மூடிப்போட்டு வைத்து விடவும். 8 மணி நேரம் கழித்து பார்த்தால் மாவு நன்றாக பொங்கி, சிறிதளவு புளித்திருக்கும்.இனி ஆப்ப மாவு கலவை செய்யலாம்.

  • 8 குழிக்கரண்டி புளித்த ஆப்பமாவுடன் 1 முட்டை, தேங்காய் கட்டிப்பால் 1குழிக்கரண்டி, உப்பு தேவையான அளவு, சோடா உப்பு 1 சிட்டிகை, தண்ணீர் 5 குழிக்கரண்டிகள், எண்ணெய் 2 தேக்கரண்டி ஆகியவற்றை சேர்த்து கலக்கி வைக்க வேண்டும்.

  • 10 நிமிடம் கழித்தப்பின்பு ஆப்பம் சுட்டெத்தால், சுவையான, ஆரோக்கியமான, ஊட்டச்சத்து மிகுந்த ஆப்பம் தயார்.

bottom of page