top of page

கருப்பு கவுனி அரிசி அடை

Prep Time:

25Minutes

Cook Time:

5Minutes

Serves:

6Servings

Level:

Beginner

About the Recipe

கருப்பு கவுனி அரிசியில் குறைவான அளவில் கலோரிகள், கொழுப்புகள் மற்றும் சர்க்கரைகள் அடங்கியிருக்கிறது. அதோடு அதிக அளவு நார்ச்சத்தும் உள்ளது. இதனை உணவாக அன்றாடம் எடுத்துக்கொள்வதால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் உடல் எடையை குறைக்க விரும்புவர்களும் கருப்பு கவுனி அரிசியை தாராளமாக எடுத்து கொள்ளலாம்.

Ingredients

  • 200 கிராம் கருப்பு கவுனி

  • 50 கிராம் (கடலை பருப்பு+துவரம் பருப்பு)

  • 5 பெரிய வெங்காயம்

  • 1 கைப்பிடி முருங்கை கீரை

  • கருவேப்பில்லை

  • 4 பூண்டு

  • 2 காய்ந்த மிளகாய்

  • 1 ஸ்பூன் சோம்பு

  • கொத்தமல்லி

  • 1/2 கப் தேங்காய்

  • தேவையான அளவு உப்பு

  • தேவையான அளவு ஆயில்

Preparation

  • அரசி, பருப்பு இரண்டையும் 5 மணி நேரம் ஊறவைக்கவும். ஒரு ஜாரில் ஊறவைத்த அரிசி, பருப்பு, மிளக்காய், சோம்பு, உப்பு சேர்த்து கொரகொரவென அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் துருவிய தேங்காய், நறுக்கிய வெங்காயம், கருவேப்பில்லை, கீரை, கொத்தமல்லி, இடித்த பூண்டு எடுத்துக்கொள்ளவும்.

  •  

    அதில் அரைத்த மாவை ஊற்றி அடை மாவு பதத்திற்கு கரைக்கவும். பிறகு தவாவை சூடு பண்ணி அடை ஊற்றவும். பாதி வெந்ததும் ஆயில் ஊற்றவும். இப்போது சூப்பரான கருப்பு கவுனி அடை ரெடி.

bottom of page