top of page

கருப்பு உளுந்து வடை

Prep Time:

15Minutes

Cook Time:

8Minutes

Serves:

4Servings

Level:

Intermediate

About the Recipe

உளுந்திலுள்ள இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் ஆகியவை, பெண்களின் இடுப்பு எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது. உளுந்தில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. நரம்பு மண்டலம் வலிமை பெற உதவுகிறது.

Ingredients

  • ஒரு கப் கருப்பு உளுந்து

  • ஒரு தேக்கரண்டி மிளகு

  • சிறிது பெருங்காயம்

  • ஒரு தேக்கரண்டி அரிசி மாவு

  • தேவையானஅளவு உப்பு

  • சிறிது தண்ணீர்

  • இரண்டு கப் எண்ணெய்

  • அரை கரண்டி சீரகம்

Preparation

  • கருப்பு உளுந்தை கழுவி முக்கால் மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் அதோடு மிளகு சீரகம் சேரத்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும் தண்ணீர் சேர்க்காமல் கெட்டியாக அரைக்கவும்.

  • அரைத்த கலவையை பாத்திரத்தில் எடுத்து உப்பு, அரிசி மாவு, பெருங்காயம் தேவையான தண்ணீர் தெளித்து கெட்டியான மாவு பதம் ஆக்கவும்.

  • பின் மாவு சிறிது எடுத்து உருட்டி பட்டையாக தட்டவும் வேண்டுமென்றால் பட்டர் பேப்பரை கீழும் மேலும் வைத்து தட்டுங்கள், பின் எண்ணையில் ஒன்றொன்றாக திருப்பி விட்டு சிவக்கும் வரை பொரித்து எடுக்கவும்.

  • மொரு மொரு என்று சூடாக இருக்கும்.

bottom of page