top of page

கருப்பு உளுந்து போண்டா

Prep Time:

10Minutes

Cook Time:

10Minutes

Serves:

3Servings

Level:

Intermediate

About the Recipe

ஜீரணமாகக் கூடியது என்பதால் பருவமடைந்த பெண் பிள்ளைகள், சிறியவர்கள் முதல் வயதானவர்கள் வரை யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம்

Ingredients

  • உளுத்தம் பருப்பு 1 கப்

  • வெங்காயம் 1 கப் (பொடியாக நறுக்கியது)

  • பச்சை மிளகாய் 2 ( பொடியாக நறுக்கியது)

  • இஞ்சி 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

  • கறிவேப்பிலை 1 கையளவு

  • கொத்தமல்லி 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

  • உப்பு சுவைக்கேற்ப

  • தண்ணீர் தேவையான அளவு

  • எண்ணெய் பொரிப்பதற்கு தேவையான அளவு

Preparation

  • முதலில் உளுத்தம் பருப்பை நீரில் போட்டு 4 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

  • பின் அதை கழுவி, கிரைண்டரில் போட்டு, நீர் அதிகம் சேர்க்காமல் நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

  • பின்பு ஒரு பாத்திரத்தில் அரைத்த உளுத்தம் மாவை எடுத்துக் கொண்டு, அதில் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

  • இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுத்தம் மாவை சிறு உருண்டைகளாக பிடித்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், மொறுமொறுப்பான உளுந்து போண்டா ரெடி!

  • இந்த போண்டாவை அப்படியே சாப்பிடலாம். விருப்பமுள்ளவர்கள் தேங்காய் சட்னியுடனும் சேர்த்து சாப்பிடலாம்.

bottom of page