top of page

கருப்பு உளுந்து பாயாசம்

Prep Time:

15Minutes

Cook Time:

15Minutes

Serves:

2Servings

Level:

Beginner

About the Recipe

கருப்பு உளுந்தில் கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்புச்சத்து நிறைவாக உள்ளது. இது எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க செய்கிறது. எல்லாவற்றையும் காட்டிலும் பெண்களுக்கு இது அதிக நன்மைகளை உண்டாக்குகிறது.

Ingredients

  • கருப்பு உளுந்து பருப்பு

  • 2 கப் பால்

  • 1கப் தண்ணீர்

  • 1/2கப் பொடித்த வெல்லம்

  • 1/2கப் நாட்டுச் சர்க்கரை

  • 2 ஏலக்காய்

  • 1 டேபிள் ஸ்பூன் நெய்

  • 3முந்திரி பருப்பு

Preparation

  • கருப்பு உளுந்தை வெறும் வாணலியில் வறுத்து நைசாக பொடித்து வைக்கவும். பொடித்து சலித்த மாவில்(2டேபிள் ஸ்பூன்), பால் மற்றும் தண்ணீர் சேர்த்து கரைச்சி கைவிடாமல் கட்டியில்லாமல் காய்ச்சவும்.

  • உளுந்து வெந்தபின் வெல்லம் மற்றும் நாட்டுச்சர்க்கரை சேர்த்து ஏலக்காய் பொடி தூவி நன்கு கலந்து ஒரு கொதி விடவும். கொதி வந்தவுடன் அடுப்பை அணைத்து இறக்கிவிடவும்.

  • ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யில் பொடித்த முந்திரியை வறுத்து பாயாசத்தில் கலந்து சூடாகப் பரிமாறவும். வாரம் ஒரு முறை பெண் குழந்தைகளுக்கு இதை செய்து தாருங்கள்.

bottom of page