top of page

கருப்பு உளுந்து தோசை

Prep Time:

30Minutes

Cook Time:

2Minutes

Serves:

10Servings

Level:

Beginner

About the Recipe

உளுந்தம் பருப்பில் அதிக அளவில் கால்சியம் உள்ளது இது எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் நல்லது ,குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஒரு உணவாகும்.

Ingredients

  • 3 கப் இட்லி அரிசி

  • 1 கப் தோல் உளுந்து

  • 1 ஸ்பூன் வெந்தயம்

  • தேவையானஅளவு உப்பு

Preparation

  • உளுந்தை ஊற வைக்க வேண்டிய அவசியமில்லை அதை நன்றாக கழுவி எடுத்துக் கொள்ளவும்

  • கழுவிய உளுந்தை கிரைண்டரில் சேர்த்து அரைத்தால் லேசாக கடகடவென்று சவுண்ட் வரும்.. சத்தம் அடங்கிய பிறகு நன்றாக பொங்கி வரும்.

  • தோல் உளுந்துடன் வெந்தயமும் சேர்க்கும்போது மணம் மிகவும் அருமையாக இருக்கும் அரைக்கும் போதே மணமாக இருக்கும். பிறகு அரிசியையும் அரைத்து இரண்டையும் ஒன்றாக கலக்கவும்

  • தேவையான அளவு உப்பு சேர்த்து கரைத்து வைக்கவும். அதை 8 மணி நேரம் அப்படியே வைத்தால் நன்றாக பொங்கி புளித்துவிடும்.

  • தோசைக்கல்லை சூடாக்கி அதில் தோசையை வார்த்து மூடி போட்டு மூடி வேக விடவும். தோசை சாப்பிடும் போது பஞ்சுபோல் அருமையாக இருக்கும்.இதே மாவில் குழந்தைகளுக்கு பிடித்த ரோஸ்ட் மாதிரியும் இலேசாக தோசை ஊற்ற முடியும்.

  • இப்போது சூடான சுவையான சத்தான தோல் உளுந்து தோசை தயார்.

bottom of page