top of page

கருப்பு உளுந்து துவையல்

Prep Time:

15Minutes

Cook Time:

25Minutes

Serves:

4Servings

Level:

Intermediate

About the Recipe

இடுப்பு வலுவில்லாமல் இருப்பவர்கள் உளுந்து களி செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி நீங்கும். உட்கார்ந்து கொண்டே அலுவலகங்களில் வேலை செய்பவர்களுக்கு உகந்தது.

Ingredients

  • தோலுடன் கூடிய உளுந்து ஒரு கப்

  • சமையல் எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்

  • வர மிளகாய் 5

  • புளி பெரிய நெல்லிக்காய் அளவு

  • மல்லி ஒரு டேபிள்ஸ்பூன்

  • சீரகம் அரை டீஸ்பூன்

  • வெந்தயம் கால் டீஸ்பூன்

  • தேங்காய்த் துருவல் அரை கப்

  • மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்

  • உப்பு தேவையான அளவு

  • எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்

  • கடுகு கால் டீஸ்பூன்

  • கறிவேப்பிலை ஒரு கொத்து

Preparation

  • முதலில் ஒரு பெரிய நெல்லிக்காய் அளவிற்கு புளியை எடுத்து அரை கப் தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளுங்கள்.

  • முதலில் ஒரு வாணலியை எடுத்துக் கொள்ளுங்கள் அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி நன்கு காய விடுங்கள்.

  • பின்னர் ஒரு கப் அளவிற்கு உளுந்தை எண்ணெயில் சேர்த்து நன்கு வாசனை வர வறுத்து எடுக்க வேண்டும்.

  • அதன் நிறம் சற்று மாறும், அந்த சமயத்தில் நீங்கள் அடுப்பை அணைத்துவிட்டு உளுந்தை தனியே ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

  • பின்னர் அதே வாணலியில் மீண்டும் கொஞ்சம் எண்ணெய் விட்டு அதில் ஐந்து வர மிளகாய்களைப் போட்டு லேசாக கருக விடாமல் வறுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் மல்லி விதைகள் மற்றும் சீரகம், வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து லேசாக வறுக்க வேண்டும். இவை நன்கு வாசம் வர வதங்கிய பின்பு அரை கப் அளவிற்கு தேங்காய் துருவல் அல்லது தேங்காய் துண்டுகள் சேர்த்து இரண்டு நிமிடம் நன்கு வதக்குங்கள். இவைகள் நன்கு வறுபட்ட உடன் அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள்.

  • பின்னர் ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். ஆறிய தேங்காயுடன் கூடிய இந்த பொருட்களை முதலில் போட்டு கால் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கொரகொரவென்று அரைத்துக் கொள்ளுங்கள்.

  • பின்னர் நீங்கள் வறுத்து வைத்துள்ள உளுந்தையும் சேர்த்து நன்கு தண்ணீர் விடாமல் அரைக்கவும். பிறகு இறுதியாக நீங்கள் ஊற வைத்துள்ள புளியை தண்ணீருடன் அப்படியே சேர்த்து, கூடுதலாக தண்ணீர் தேவைப்பட்டால் அரை கப் அளவிற்கு தண்ணீரை சேர்த்து துவையல் போல கெட்டியாக கொரகொரவென்று அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

  • இப்பொழுது இந்த சுவையான உளுந்து துவையலுக்கு ஒரு தாளிப்பு கொடுக்க வேண்டியது தான்.

  • தாளிக்க அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு தாளிப்பு கரண்டியை வைத்துக் கொள்ளுங்கள். தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி நன்கு காய விடுங்கள். எண்ணெய் நிறைய சேர்ப்பதால் சட்னியின் சுவை அதிகரிக்கும்.

  • எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு நன்கு பொரிந்து வந்ததும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து துவையலுடன் கலந்து சுட சுட இட்லி, தோசை, சப்பாத்தி, சாதத்துடன் பரிமாற வேண்டியது தான். இதே முறையில் நீங்களும் செய்து பார்த்து அசத்துங்கள்.

bottom of page