top of page

கருப்பு உளுந்து சட்னி

Prep Time:

5Minutes

Cook Time:

12Minutes

Serves:

4Servings

Level:

Beginner

About the Recipe

உளுந்து பருப்பில் உள்ள நார்ச்சத்தும் நொதித்த பிறகு வாயுவை வைத்திருக்க உதவுகிறது. ஊட்டச்சத்து மதிப்புக்கு வரும்போது, உளுந்து பருப்பில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து பித்த அமிலங்களை பிணைத்து, உடலால் உறிஞ்சப்படுவதைத் தடுக்கிறது, இதனால் கொழுப்பின் அளவைக் குறைக்கிறது.

Ingredients

  • 100கிராம் கருப்பு முழு உளுந்து

  • 10-15 பூண்டுப்பல்

  • 7-10 வரமிளகாய்

  • 2 கொத்து கறிவேப்பிலை

  • 1 நெல்லிக்காய் அளவு புளி

  • 1ஸ்பூன் பெருங்காயத்தூள்

  • உப்பு தேவையான அளவு

  • எண்ணெய் தேவையான அளவு

Preparation

  • ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் முதலில் பூண்டு பல்லை சேர்த்து வதக்கவும். பிறகு உளுந்தை சேர்த்து மிதமான தீயில் வறுத்து சிறிது சிவக்க வதக்கவும்.

  • பிறகு வரமிளகாய் சேர்த்து வதக்கி அதனுடன் கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும்.

  • இதனுடன் பெருங்காயத்தூள், புளி சேர்த்து மிதமான தீயில் மீண்டும் 5 நிமிடங்கள் வைத்து அனைத்தையும் ஒரு சேர வதக்கவும்.

  • இதனை ஆற வைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி நைசாக சிறிது கெட்டியாக அரைத்து எடுக்கவும்.

bottom of page