top of page

கருப்பு உளுந்து இட்லி

Prep Time:

25Minutes

Cook Time:

10Minutes

Serves:

5Servings

Level:

Beginner

About the Recipe

அனைத்து பருப்பு வகைகளும் ஏழைகளின் இறைச்சி என்று அழைக்கப்படுகின்றன, ஏனெனில் அவை அந்த இறைச்சிக்கு சமமான அளவு புரதத்தைக் கொண்டுள்ளன. உளுந்து பருப்பில் அதிக அளவு புரதம் உள்ளது. உளுந்து பருப்பு குறிப்பாக இட்லிக்கு சிறந்தது.

Ingredients

  • 1 1/2 டம்ளர் இட்லி அரிசி

  • 1 1/2 டம்ளர்பச்சரிசி

  • 3/4 டம்ளர் கருப்பு உளுத்தம் பருப்பு

Preparation

  • இட்லி அரிசி, பச்சரிசி இரண்டையும் கழுவி 4மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.

  • கருப்பு உளுத்தம்பருப்பை கழுவி 1/2மணி நேரம் ஊற வைத்து கிரைண்டரில் போட்டு 20 நிமிடம் அரைத்துக் கொள்ளவும்.

  • பிறகு அரிசியையும் அரைத்து உப்பு சேர்த்து கரைத்து மறுநாள் இட்லி ஊற்றவும்.

  • உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான கருப்பு உளுந்து இட்லி ரெடி.

bottom of page