top of page

கருங்குறுவை மசாலா கஞ்சி

Prep Time:

15Minutes

Cook Time:

45Minutes

Serves:

6Servings

Level:

Beginner

About the Recipe

அரிசி ஒரு பங்கும், தண்ணீர் மூன்று பங்கும் சேர்த்து மண்பானையில் ஆறு மாதம் வைத்திருந்தால் அது பால்போல் மாறிவிடும்.
அதற்கு `அன்னக்காடி’ என்று பெயர்.
காடி என்றால் மருந்து என்று அர்த்தம்.
இதை உண்டுவந்தால் மிகக் கொடிய வியாதியான காலரா மட்டுப்படும்.
கருங்குறுவை அரிசியை மூலிகைகளுடன் சேர்க்கும்போது, வீரியம் அதிகரிப்பதுடன் கிரியா ஊக்கியாகவும் செயல்படும்.
நோய்வாய்ப்பட்டிருப்பவர்கள் இந்த அரிசியைக் கஞ்சி வைத்துக் குடித்துவந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகி மருத்துவமனை செல்லாமலேயே குணமடையலாம்.

Ingredients

  • 1 கப் கருங்குறுவை அரிசி

  • 5 சின்ன வெங்காயம்

  • 1 தக்காளி

  • 1 பச்சை மிளகாய்

  • 1 கைப்பிடி கொத்தமல்லி

  • 1 கைப்பிடி புதினா

  • 1/4ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது

  • 1/2ஸ்பூன் கரம் மசாலா தூள்

  • மஞ்சள் தூள் தேவையான அளவு

  • உப்பு

  • 1 ஸ்பூன் நல்லெண்ணெய்

Preparation

  • கருங்குறுவை அரிசியினை முதலில் குருணையாக உடைத்துக் கொள்ளவும் .பின் அதில் 6 கப் தண்ணீர் விட்டு காய்ச்சவும்.

  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, சின்ன வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும்.

  • பிறகு பச்சை மிளகாய், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், தக்காளி, உப்பு போட்டு நன்கு வதங்க புதினா, கொத்தமல்லி சேர்க்கவும்.

  • நன்கு வதங்கியதும் காய்ச்சிய கருங்குறுவையை இதில் சேர்க்கவும்.

  • தேவைப்பட்டால் சிறிது நெய் சேர்த்துக்கொள்ள சுவையாகவும் சாத்தனாதாகவும் இருக்கும்.

bottom of page