top of page

கருங்குறுவை புட்டு

Prep Time:

20Minutes

Cook Time:

25Minutes

Serves:

2Servings

Level:

Intermediate

About the Recipe

சாதாரண அரிசியுடன் ஒப்பிடும் போது இதில் 4 மடங்கு அதிகம் இரும்புச் சத்து உள்ளது. அதாவது 100 கிராம் கருங்குருவை அரிசியில் 19 கிராம் இரும்புச் சத்து உள்ளது. எனவே இது இரத்த சிவப்பணுக்கள் உருவாக உதவுவதன் மூலம் இரத்த சோகையைத் தடுக்கிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

Ingredients

  • கருங்குறுவை அரிசி ஒரு கப்

  • பாசிப்பருப்பு அரை கப்

  • வெல்லம் ஒரு கப்

  • தேங்காய்த் துருவல் கால் கப்

  • நெய் 2 டேபிள்ஸ்பூன்

  • முந்திரி, திராட்சை சிறிதளவு

  • ஏலக்காய்த்தூள் சிறிதளவு

  • உப்பு தேவையான அளவு

Preparation

  • கருக்குறுவை அரிசி மற்றும் பாசிப்பருப்பை தனித்தனியே 2 மணி நேரம் ஊறவைத்து, பிறகு மிக்ஸியில் ஒன்றாகச் சேர்க்கவும். இத்துடன் தேவையான அளவு உப்பு, தண்ணீர் விட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.

  • வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி கரைய விடவும். கரைந்ததும் வடிகட்டி தனியாக எடுத்து வைக்கவும்.

  • அடுப்பில் வாணலியை வைத்து நெய் சேர்த்துச் சூடாக்கி முந்திரி, திராட்சையை வறுத்து தனியே வைக்கவும். இதே வாணலியில் அரைத்த மாவைச் சேர்த்து, நன்கு உதிரியாக வரும் வரை, மிதமான தீயில் கிளறவும்,

  • மற்றொரு பாத்திரத்தில் வடிகட்டிய வெல்லப்பாகைச் சேர்த்து சூடாக்கி மாவில் சேர்த்துக் கிளறவும். பிறகு, வறுத்த முந்திரி, திராட்சை, ஏலக்காய்த்தூள், தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கி, ஆறியதும் பரிமாறவும்.

bottom of page