top of page

கருங்குறுவை பாயாசம்

Prep Time:

10Minutes

Cook Time:

20Minutes

Serves:

3Servings

Level:

Beginner

About the Recipe

கருங்குறுவை நரம்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

Ingredients

  • உடைத்த கருங்குறுவை அரிசி 4 டேபிள்ஸ்பூன்

  • பால் அரை லிட்டர்

  • மில்க்மெய்ட் கால் கப்

  • பாதாம் பவுடர் 2 டேபிள்ஸ்பூன்

  • தோல் நீக்கி துருவிய பாதாம் - 10

  • ரோஸ் எசன்ஸ் 2 சொட்டு

Preparation

  • கருங்குறுவை அரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்து, பிறகு நிழலில் ஈரம் போக உலர்த்தவும்.

  • ஈரம் போனதும் மிக்ஸியில் சேர்த்து ரவை பதத்துக்கு உடைத்து வைக்கவும்.

  • அடுப்பில் பாத்திரத்தை வைத்து பால், உடைத்த கருங்குறுவை அரிசி சேர்த்து வேகவிடவும்.

  • தீயை மிதமாக்கவும், அரிசி ரவை நன்கு வெந்ததும் பாதாம் பவுடர், மில்க்மெய்ட் கலந்து கொதிக்கவிடவும்.

  • கொதி வந்ததும் துருவிய பாதாம் சேர்க்கவும்.

  • பிறகு இறக்கி, ரோஸ் எசன்ஸ் சேர்த்துக் கலக்கி, சூடாகவோ, குளிரவைத்தோ பரிமாறவும்.

bottom of page