top of page

கருங்குறுவை தோசை

Prep Time:

30Minutes

Cook Time:

3Minutes

Serves:

15Servings

Level:

Beginner

About the Recipe

கருங்குறுவை அரிசியில் நம் உடலைப் பாதுகாக்கும் "காயகல்பம்" குணம் உள்ளது (காய கல்ப நடைமுறைகள் பழைய செல்களை புதியதாக மாற்றி, உடல் சிதைவை ஏற்படுத்தும் அனைத்து அசுத்தங்களையும் நச்சுகளையும் நீக்குகிறது)

Ingredients

  • 500 கிராம் கருங்குறுவை அரிசி

  • 500 கிராம் இட்லி அரிசி

  • 150 கிராம் முழுஉளுந்து

  • தேவையானஅளவு உப்பு

  • 1டீஸ்பூன் வெந்தயம்

Preparation

  • உளுந்துடன் வெந்தயம் சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும். அரிசியை நன்கு கழுவி 6 மணி நேரம் ஊற வைக்கவும்.

  • ஊறிய அரிசியை மிகவும் நைசாக இல்லாமல் சற்று கரகரப்பாக அரைத்து வைக்கவும். உளுத்தம்பருப்பை நன்கு கழுவி அரைத்து அரிசி மாவுடன் சேர்த்து உப்பு போட்டு நன்கு கலந்து குறைந்தது 8மணி நேரம் புளிக்க வைக்கவும்.

  • பின்னர் மாவைக் கலந்து தோசை செய்யலாம். சுவையும் அருமை. இதற்கு சட்னி வகைகள் காம்பினேஷன் அருமையாக இருக்கும்.

bottom of page